எங்கள் குரு திரு.சிவ செல்வராஜ் அவர்களை பற்றி அவர் எழுதிய நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது.குருவை பற்றி அவரே கூறுவது.

பணியுரை

வந்தனம். நன்றி. நலமே நிலவுக.எல்லாம்வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,1980ம் வருடம் விழி திறக்க பெற்றேன். வழி காட்டி ஆன்மிக பாதையில் நடை பயிலச் செய்தனர்.கண்ணியனானேன். கடைத்தேற வழி கிட்டியது.

குமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் எனும் ஊரில், அறிதுயில் கொண்ட அருகம்புல் சித்தர் நடராஜ சுவாமிகளை சமாதி வைக்கும் பெரும் பேறு அடியேனுக்கு கிட்டியது. 6 சென்ட் நிலம் காணிக்கையாக கொடுத்துபுண்ணியம்தேடி கொண்டேன். அருகம்புல் சித்தர் பெருமகனாரோடு பலகாலமாக பழகும் பாக்கியம் கிட்டியதால் ஞான நிலைகள் பல அறியும் பேறு கிட்டியது. அடியேனுக்கு பீரப்பா பற்றி கூறி அருளியதும் அருகம்புல் சித்தரே. பாடினேன் அவர் மகிமையை. பார்த்துஅருளினார் அடியேனை

அடியேனின் தீட்சா குருநாதர் ஞான சித்தர் ஜோதி ராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி ஆகும் சமயம் அடியனே அழைத்து குருவாக இருக்க பணித்தார்கள். குருவிற்கு சமாதி வைக்கும் பேறும் கிட்டியது. பெரும் பேறு பெற்றேன். குருவின் பரிபூரண அருள் பெற்றேன். ஆன்மிக அனுபவங்களை தந்து வள்ளல் பெருமான் அடியேனை மெருகேற்றினார்.

தேரூர் எனும் ஊரில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊரில், அருள்மிகு அழகிய மணவாள விநாயகர், அருள்மிகு ஹனுமான் கோயில் கொண்டுள்ள மடத்தில் ஆன்மிக பணிபுரிந்து வரும்குருமஹதேவ் அவர்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.ஒரு வருடம் அவர் அருளுரைகளை கேட்டு அறிவு பெற்றேன்.அடியேன் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் அருள் பெற குரு மகாதேவ் அவர்களே காரணமானார். குரு மகாதேவ்அவர்களை சமாதி வைக்கும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. பெரும் புண்ணியம்கிட்டியது.

1980 முதல் 1992 வரை 12 வருடம் தீவிர சாதனையின் பயனாக வள்ளல் பெருமானின் அருளால் “கண்மணி மாலை” எனும் கருத்தோவியம்ஆன்மிகபுரட்சி நூல் வெளியிட்டேன். வெளியிடவைத்தனர் சித்தர்கள் பலர். அருள் புரிந்தார் அம்மையப்பன். காலங்காலமாக பலரும் இரகசியம்என மறைத்த ஞானத்தை இந்நூல் பரசியமாக்கியது.

மரணமில்லா பெருவாழ்வு பெற்ற ஞானிகள் , சித்தர்கள் நம் நாட்டில் ஏராளம். ஒப்பற்ற இறைவனை உணர்ந்து ஒளி உடல் பெற்ற மகான்கள் ஏராளம். இந்தியாவின் பெருமையே இதுதான்.

எந்தன் வாழ்வில் அருள் கூட்டிய ஞானிகள் பலர். வழி காட்டியோர் பலர்.

இன்னார் என்று அறிவிக்காமலேயே எனக்கு வழி காட்டிய தெய்வம் சற்குரு கோவிந்த சுவாமிகள். கன்னியாகுமரி பகவதி அம்மன் வாலை அருள் பெற சற்குரு கோவிந்த சுவாமிகளின் அருளாசியே காரணம்.
கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழி காட்டியதால் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழி காட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார். சூட்சம நிலையில் இருந்து ஆன்மிக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவதே கோவிந்த சுவாமிகளின் ஒப்பற்ற பணி.இந்த ஒப்பற்ற ஒளி நிலை அடைந்த ஞானியை பாடி “சற்குரு கோவிந்தா சுவாமிகள்” என்றநூலை வெளியிட்டேன்.

திருச்செந்தூர் செந்திலாண்டவனும்,சுசீந்திரம் ஆஞ்சநேயரும் கன்னியாகுமரி பகவதியம்மனும் உயிர் காத்து உன்னத நிலை தந்து குருவாக்கி குவலயம் வணங்க வைத்தனர். பிறந்த பயனை பெற்றேன்.

உலகீன்ற அன்னை. எவ்வுயிருகும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். மகாமாயை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலை குமரி.என்றும் கன்னி.உலகை காக்கும் தாய்.அடியேனுக்கு காட்சி கொடுத்து கன்னியாகுமரியில் அமர்த்தி,என்னைபக்குவபடுத்தி குருபீடத்தில் அமர்தியவள் இந்த வாலை.

வலிந்து எம்மை ஆட்கொண்டார் வள்ளல் இராமலிங்கர். அறிவிலா சிறு பருவத்தே எம்மை உடனிருந்துகாத்த ஒளியான ஞானி. இன்று அடியேனை பரிபூரணமாக ஆட்கொண்டு சற்குருவாக அமர்த்தி , ஞானஉபதேசம் திருவடி தீட்சை கொடுக்க அருள் புரிந்து வருகிறார் வள்ளல் பெருமான். நான் உரைக்கும்வார்த்தையெல்லாம் வள்ளல் பெருமான் எம் உள்ளத்திலிருந்து வெளிபடுத்துவதே. எம்மை, எம்குடும்பத்தை , எம் சீடர்களை காத்து அருள்வதும் மெய்ஞான சற்குரு வள்ளல் பெருமானே.

சற்குரு வள்ளல் பெருமானின் அருளால் இதுவரை 38 ஞான நூற்களை வெளியிட்டு உள்ளேன்.ஆனைத்தும் மெய் ஞான இரகசியங்களை வெளிப்படையாக கூறுவது. இதில் திருமந்திரம் , திருவாசகம்,திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஞானிகளின்பாடல்களுக்கான மெய்ஞான விளக்கங்கள்,ஞான மேதை தக்கலை பீர்முஹம்மது ஒலியுள்ள அவர்களின் பாடல்களும், இயேசு கிறிஸ்துவின் பைபிளின்உரைகளும் அடங்கும்.

அணைத்து ஞானிகள்கூறியுள்ள மெய்பொருள்ஒன்றே – “கண்களே” – என்றும், கண்கலே நம் உடலில் உள்ள இறைவனை காண நாம் உட்புகும் வாசல் என்பதை என் நூல்கள்மூலம் விளக்கி தெளிவுபடுத்தியுள்ளேன். காலம் காலமாக இரகசியம் என்று மறைத்து வைத்திருந்த இரகசியங்களை இநூல்கள் வெளியிடுகிறது.

இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீட்சை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில்நடத்தியும் வருகிறேன். சீடர்கள் காணிக்கையால் வாழ்கிறேன். வள்ளல் பெருமான் வளமோடு வாழ்வாங்குவாழ வைக்கிறார்.

சைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டுமே ஞானம் கிட்டும். சைவ உணவே சன்மார்க்க உணவு. வாருங்கள். உங்களுக்கும் ஞானம் கிட்டும் எட்டும்.

மரணமில்லா பெரு வாழ்வு வாழ முதலில் உபதேசம். அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை. மெய்பொருளை எல்லோரும் அறிந்து உணர்ந்துஎல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாகவே செயல்படுகிறேன்.

இப்பணி செய்ய வைத்த பரமனுக்கு நன்றி. பாமரன் அடியேனைபண்புள்ளவனாக மாற்றிய வாலை பொற்பாதமே சரணம். சரணம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

என்றும் உண்மையுள்ள
சிவ செல்வராஜ்

Share

5 Comments

  • Ashok Kumar K
    Posted November 14, 2013 6:27 am 0Likes

    Kann paarvai illathor eppadi iravanai adaya mudiyum??

    • admin
      Posted November 14, 2013 10:07 am 0Likes

      Please read the article Tiruvadi Upadesam and Saaga Kalvi in full. Else read the Q&A section. Answer is there in that.

  • poomalai
    Posted August 9, 2014 1:43 pm 0Likes

    குருநாதரின் விளக்க உரை மெய்சிலிர்க்க வைக்கிறது அன்னாரின் ஜீவசமாதியில் வணங்க விரும்புகிறேன, அருள் கிடைக்குமா?
    வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

  • வேம்பு சேகர்
    Posted June 20, 2015 5:59 am 0Likes

    சித்தர் களுக்கு வணக்கம் . நான் மெய்ஞான வழியில் செல்ல வேண்டும். தங்களின் சித்தஞானாலயம் எங்கு அமைந்துள்ளன

  • D kannan
    Posted February 8, 2019 8:55 am 0Likes

    guruve saranam

Leave a comment