சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனது குலத் தெய்வமேநல்
கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக்
பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை
பிழைக்கவருள் செய்வாயா பிழையை நோக்கிக்
பார்பூத்த பாவத்திலுற விடிலென் செய்கேன்
பாவியே னந்தோ வன்பயந் தீரேனே
சீர் பூத்த அருட்கடலே – இறைவன் நமக்கு கொடுக்க சீர் – ஒளி
-பூத்த – எதுபூக்கும் மலர்தானே – கன்மலர் தான்.கண்மலரின்
ஒளியான இறைவன் அருளை வாரி வழங்குவதில் வற்றாத
கடல் கரும்பு தேன் மற்றும் இனிமையானவன். எனது கண்ணில்
ஒளியான இறைவனே எனது குல தெய்வம். கூரான வேலை
முச்சுடரும் சேர்ந்த நிலையை சேர்ந்த நிலையை உடைய கண்மலர்
கையுடைய அரசே அன்பும் அமைதியும் சாந்த குணமும் கொண்ட
என் கண்ணே உபசந்தபதமே. தணிகை மலை தலைவனே
ஞானம் தரும் உன் பெருமையை பேசி வாழ அருள் செய். என்
வினை வழி துன்பத்திலாழ்ந்து மீண்டும் பிறவி கடலுள் புகாது
என்னை காத்தருள் என் கண்மணியே ஒளியே என்கிறார்.
தணிகை வரையமுதே ஆதிதெய்வமே – பாடல் 2
தணிகையான என் கண் ஒளி அமுதே நீயே ஆதிதெய்வம் அதாவது
நாம் தவம் செய்தால் முதலில் காணும் தெய்வம் நம் கண் ஒளி.
கையாத அன்புடையார் அங்கை மேவும் கனியே யென்னுயிரே
யென் கண்ணே யென்றும் பொய்யாத பூரணமே தணிகை ஞானப்பொருளே
– பாடல் 5
தூய அன்புடையவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்
இறைவா! என் உயிராக இருக்கும் இறைவா! என் கண்ணே – கண்மணியுள்
ஒளியே இறைவா! சாத்தியமான வஸ்துவே! குறைவேயில்லாத
பரிபூரணமே தணிகையை நான் அடைந்தால் என் ஞானப் பொருளே நீ தான்.
துய்க்குமர குருவே தென்தணிகைமேவும் சோதியே பாடல் 6
தூய்மையான – நம் உடலில் தூய்மையானது கண்மணி மட்டுமே
குமரகுருவே – குமரன் என்றால் இளைஞன் – இளமை -நம் கணிமணி
மட்டுமே பிறந்ததிலிருந்து வளர்ச்சி யடையாமல் என்றும் இளைமையாக
இருப்பது அதில் உள்ள ஒளியே – நம் உயிரே நமக்கு குருவாகும். அதாவது
அவரவர்க்கு அவரவர் ஆன்மாவே குரு. அதை அடைய உணர வழிகாட்ட
வெளியே ஒரு நல்ல குருவை பெற்றுக்கொள்ளுங்கள். தணிகை மேவும்
சோதியே – நம் குறை தணிந்து வரும்போது மனம் அடங்கும் போது
அதில் – கண்மணியில் உள்ள சோதி வெளிப்படும், காணலாம். தணிகை
சோதியே என வள்ளலார் உரைத்தது இதுவே.
ஞானக்குல மணியே குகனே சற்குருவே யார்க்கு தேவே
நின்னிரண்டு திருத்தாள் சீரே — பாடல் 10
என் மணியே – கண்மணியே எனக்கு ஞானத்தை தரும் என் குல
தெய்வம். கண்மணி குகையினுள் இருக்கும் ஒளியான குகனானவனே
எனக்கு சற்குரு. உலகில் உள்ள யார்க்கும் தெய்வம்
கண்மணி ஒளியே. இறைவா உடல் இரு தாமரை திருவடிகளே
அதிலுள்ள ஒளியே நீ எனக்கு வழங்கிய சீர்.
ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருபாமாலை