இறைவன் சொல்லவதை கேட்பீர்களா? அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொல்வதை கேட்பீர்களா?
எந்த ஆன்மீக பயிற்சி செய்வீர்கள்? இறைவன் சொல்லவதை கேட்பீர்களா? அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொல்வதை கேட்பீர்களா?
இந்த உலகத்திற்கே முதல் குரு யார்? தட்சிணாமூர்த்தி.
தட்சிணாமூர்த்தி உடைய கோலம். அந்த இருப்பு அதுவே நமக்கு உபதேசம் – நாம் செய்ய வேண்டியது – நமக்கு சொல்லமால் சொல்வது.
தட்சிணாமூர்த்தி உடைய கோலம் அவர் நிலை எப்படி என்பதினை பரஞ்சோதி மகான் “திருவிளையாடல் புராணத்தில்” கீழ் உள்ள பாடலில் எழுதி உள்ளார். என்ன என்று பார்க்கலாம்.
பரஞ்சோதி மகான் .
“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுவாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டியே
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வோம்”
சனகாதி முனிவர்களுக்கு முன்னாடி வந்து தட்சிணாமூர்த்தி உட்கார்ந்து இருக்கிறார். ஒரு கையில் அக்னி, இன்னொரு கையில் உடுக்கை. இறைவன் எப்படி இருக்கார் என்பதை விளக்குவது அவரை எப்படி அடைய முடியும் என்பதை விளக்குவது தான் தட்சிணாமூர்த்தி உடைய கோலம்.
இறைவன் எப்படி இருக்கார் என்றால் ஒளி ஒலி. இது தான் விஞ்ஞானனதிற்கும் பேஸ் (அடிப்படை). ஆன்மிகத்திற்கும் ஒளி தான் பேஸ் (அடிப்படை). ஒளியும் ஒலியுமாக இறைவன் இருக்கிறார். சக்தி சிவமாக உயர்ந்திருக்கிறார். அப்படி ஒளி ஒலியாக இருக்க கூடிய இறைவன் அதை பத்தி தான் கையில் ஏடு வைத்து கொண்டுள்ளார். அதாவது எல்லா வேதங்களும் சொல்லுவது இந்த விஷயம் தான். இறைவன் ஒளியும் ஒலியுமாக இருக்கிறான்.
சரி அந்த இறைவனை எப்படி தெரிந்து கொள்வது. இன்னொரு கையில் சின் முத்திரை. சின் முத்திரையை பிடித்து கொண்டால் இறைவனை பிடித்து கொள்ளலாம். அதாவது வேதங்களில் சொல்லப்பட ஒளியும் ஒலியுமான இறைவன் அவனை பிடிக்க வேண்டும் என்றால் சின் முத்திரையை பிடித்து கொள்ளுங்கள். இதை வாய் விட்டு சொல்லவில்லை. அவருகைய கோலம் – இருந்த கோலம் உணர்த்தியது. சின்முத்திரை என்றால் என்னது?
சின்முத்திரை எப்படி வைக்க வேண்டும்? பெருவிரலால் ஆள்காட்டி விரலின் நுனியை தொடுவது பரத நாட்டிய முத்திரை. சின்முத்திரை அல்ல அது. சின்முத்திரை என்பது ஆள்காட்டி விரலால் பெருவிரலின் மத்திய கோடினை தொடுவது. இது தான் உண்மையான சின் முத்திரை.
சின்முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம். இதை சொல்லாமல் இருந்து காட்டி உள்ளார் தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம். நிறைய பேர் இந்த சின் முத்திரையை கையில் பிடித்து கண்ணை மூடி கொண்டு தவம் செய்வர். அப்படி இருந்தால் ஒன்னும் கிடைக்காது. எத்தனை ஆயிரம் வருடம் இருந்தாலும் ஒரு புரியோசனமும் இல்லை. அப்போ சின் முத்திரையோட பொருள் என்ன வென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சின் முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம் எப்படி?
“பரசிவம் சின்மயம் பூரணம் ” என்று வள்ளல் பெருமான் பாடியிருக்கிறார். இறைவன் சின்மயமாக இருக்கிறார். சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்பதே. நமது கண்ணின் அளவு பெருவிரலின் நுனியில் இருந்து நாடு கொடு வரை. இவ்வாறு சின்முத்திரையை பிடித்து கொண்டு நம் கைகளை பார்த்தல் அது கண் போல் இருக்கும். சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்று அர்த்தம். சொல்லாமல் சொன்னவரை – தட்சிணாமூர்த்தி சொல்லவில்லை. உணர்த்தி காட்டி இருக்கிறார். புரிந்து கொள் என்று சொல்லி இருக்கிறார். சனகாதி முனிவர்கள் புத்திசாலிகள் அதனால் புரிந்து கொண்டார்கள்.
அதாவது நாம் கடவுளை நினைத்தோம், ஒரு உருவம் வந்தது அதன் அமைப்பு அதன் மூலம் உணர்த்த பெற்றது இவைகளை புரிந்து கொண்டார்கள் சனகாதி முனிவர்கள். புரிந்து கொண்டு இறைவனை அடைந்தார்கள்.
சரி சின்முத்திரையை பிடி என்றால் கண்ணை பிடித்து கொள்ள வேண்டும் என்று பார்த்தோம்.
சரி கண்ணை எப்படி பிடித்து கொள்வது?
ஒளியும் ஒலியுமான இறைவன் கண்களில் துலங்குகிறான். அப்போ அந்த கண்களில் உள்ள ஒளியை அறிந்து கொள். குரு மூலமாக உணர்ந்து கொள். தவம் செய் இறைவனை அடைந்து விடலாம். தட்சிணாமூர்த்தி வந்து வாய் விட்டு உபதேசம் செய்திருந்தால் அது பேசுவது அல்லவா. பேசவில்லை அவர். அப்போ நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதினையும் உணர்த்தினார். சும்மா இருந்தார். அப்போ கண்ணைபிடிக்கணும் சும்மா இருக்கனும் என்பதினை சொல்லமால் சொல்லி விட்டார்.
சரி எப்படி கண்ணை மூடி கொண்டா இருக்கணும்!? கண்ணை திறந்து கொண்டு இருக்கனும். அரை கண்ணாவது திறக்கணும். முழு கண்ணையும் திறந்தால் “பொவுர்ணமி திருஷ்டி “ என்று பெயர். அரை கண் திறக்கும் போது “பிரதம திருஷ்டி” என்று பெயர். கண்ணை முழுமையாக மூடினால் “அமாவாசை திருஷ்டி” என்று பெயர்.
தவம் செய்யும் போது முதலில் கண்ணை மூடி குருவை வணங்கி விட்டு “பொவுர்ணமி திருஷ்டி “க்கு வர வேண்டும். பவுர்ணமி திருஷ்டியில் இருந்து கண்மணி உணர்வை பெருக்கி கொண்டு பிரதம திருஷ்டிக்கு வந்து அப்படியே எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் இருக்காலாம். பிரதம திருஷ்டியிலயே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தினவர் தான் தட்சிணாமூர்த்தி.
“சும்மா இரு” என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். “சொல்லாமல் சொன்னவரை” – உணர்த்தி காட்டி உள்ளார், இருந்து காட்டி உள்ளார். “இருந்ததனை இருந்தபடியே இருந்து காட்டிய”.
இது தான் தட்சிணாமூர்த்தி உடைய கோலம்.
அவரை நாம் “நினையாமல் நினைக்கிறோம்”.
“நினையாமல் நினைப்பது” என்பது எப்படி? ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கிறது. நினையாமல் நினைக்கணுமாம்! நினைக்கிறோம் என்றாலே எண்ணங்கள் வந்து விடுகிறது அல்லவா? நினைவு என்றால் எண்ணம் தானே. அப்போ எண்ணம் வந்தால் சும்மா இருக்க முடியாதே!? புரிந்து கொண்டீர்களா! நினைப்பு அப்படி என்றால் ஒரு எண்ணம் தானே. எண்ணம் என்று ஒன்று வந்து விட்டால் அப்புறம் எப்படி சும்மா இருப்பது? எண்ணம் செயல் படுமே. எண்ணம் விரிவடைந்து கொண்டே போகும். அப்புறம் எப்படி செயல் படுவது?
“நினையாமல் ” இதில் தான் சூட்சுமம் இருக்கிறது. அந்த ஒரு வார்த்தைக்கு எவ்வளவு பொருள் இருக்கிறது பாருங்கள்! “நினையாமல் நினைக்கணும்” – அப்போ நினைக்க கூடாது. ஆனால் நினைக்கணுமாம். எதை? இப்போ நாம காலில் அடிபட்டு விட்டது என்று வையுங்கள் அதாவது கால் விரல் கிழிந்து இரத்தம் வருகிறது. அப்போ வேறு யாரவது பேசினாலோ அல்லது வேறு எதிலோ நமது மனம் போகுமா!? போகாது. எங்கே வலி இருக்கோ அந்த இடத்தில் மட்டும் தான் நினைவு இருக்கும். நாம் அந்த இடைத்தை நினைக்கவா செய்கிறோம்? இல்லை! உணர்கிறோம். அந்த வலியை உணர்கிறோமே தவிர நினைக்கவில்லை. “நினையாமல் நினைப்பது” என்பது இது தான்.
மெய்பொருளில், திருவடியில் கண்களில் குரு கொடுக்கிற அந்த தீட்சை என்பது அந்த உணர்வு தான். அந்த உணர்வை நீங்கள் – உணர்வை மட்டும் பிடித்து கொண்டால் போதும். நீங்கள் நினைக்க வேண்டாம். கண் இருக்கு , மெய்பொருள் இருக்கு , பாப்பா இருக்கு அதை எல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம். அதில் உணர்வு இருக்கு பார்த்தீர்களா அந்த உணர்வினை மட்டும் பிடித்து கொண்டால் போதும். இது தான் நினையாமல் நினைப்பது.
தட்சிணாமூர்த்தி உடைய கோலம் அமைப்பே இது தான். ஞானம். இதை இந்த உலகத்திலே ஒருத்தர் கூட சொல்லி கொடுக்க வில்லை. தங்க ஜோதி ஞான சபை தான் இதை சொல்லி கொடுக்கிறோம். வேறு எங்காவது சொல்லி கொடுக்கிறார்களா? வேறு எங்காவது நீங்கள் கேட்டு உள்ளீர்களா? சரி இப்போ நான் சொன்னது எல்லாம் சரி தானா? நான் சொன்னது எல்லாம் சரி தான் என்பதை முருக பெருமான் வந்து அக்செப்ட் பண்றாரு. எப்படி? சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக வந்த இறைவன் அருணகிரி நாதருக்கு முருக பெருமானாக வருகிறார். என்ன உபதேசம் செய்தார்!?
“சும்மா இரு சொல் அற என்றலுமேஅம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.”
“பெம்மான் முருகன் பிறவான் இறவான்”.
தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திருக்கு உணர்த்தின “சும்மா இரு” ஞானத்தினை , அருணகிரி நாதருக்கு முருக பெருமான் நேரடியாகவே வந்து “சும்மா இரு” என்று சொல்லி விட்டு போய்விட்டார். அப்போ சரி தானே. அப்போ நான் சொல்லவில்லை இறைவனே சொல்லி இருக்கிறார். இது தான் உண்மை.
தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திற்கு உணர்த்தியதை முருக பெருமானாக வந்து உபதேசம் செய்து விட்டு’ போய்விட்டார். இன்று எவ்வளவோ ஆசிரமம் , எவ்வளவு குருமார்கள் என்னவெல்லாமோ சொல்லி விட்டு திரிகிறார்கள். அங்கு இருக்கிறான் இறைவன், இங்கு இருக்கிறான் இறைவன் அதே பண்ணுக இதே பண்ணுங்க மூச்சை பிடியுங்கள் வாசி யோகம் பண்ணுங்க அப்படி என்னவெல்லாமோ சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திற்கு சொன்னாரு முருக பெருமானா வந்து அதனை உறுதி படுத்தினாரு.
கடவுள் சொன்னதை பின்பற்றுவீர்களா அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொன்னதை பின்பற்றுவீர்களா!?நீங்களே முடிவு செய்யுங்க.
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா தைபூச உபதேசம் 2014
முழு உரை படிக்கச் / பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
2 Comments
Pillai Venkatesan
அற்புதம்
Pillai Venkatesan
அற்புதம்….உண்மை. ..நிலையான ஓன்று