ஆதியே துணை

குருவாழ்க! ஆதியே துணை. குருவே துணை!!

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
தங்க ஜோதி ஞானசபை, கன்னியாகுமரி – 629702

ஆன்மநேய ஒருமைப்பபாடுடையீர் வணக்கம்!

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி புறத்திலும், அகத்திலும் அலைந்த சான்றோர் பெருமக்கள் மூல முழு உண்மையை கண்டு ஆய்ந்து இதுதான் என்று சாட்சி கூறி வெளிப்படுத்தி வைத்தார்கள். பிரபஞ்ச பெருவெளியெங்கும் ஒலி, ஒளியாக விரிந்திருப்பினும் தேகம் என்ற ஆலயத்திற்குள்தான் அது முழுமையாக வெளிப்பட முடியும் என்று உணர்ந்தனர். அந்த உணர்வின் அடிப்படையே சகல வேதங்களிலும் சர்வ மதங்களும், மதங்களின் வழி வெளிப்பட்ட சாஸ்திர சடங்குகளும் ஒன்றையே குறிவைத்து ஞான குறியீடாக பேசி உள்ளன. அந்த ஒன்றுதான் ஆதிமூலம். சித்தர்கள் வழிபடும் ஜோதிமூலம் அந்த ஆதியை அறிந்து கொள்ளவும், ஜோதியை உணர்ந்து கொள்ளவும் வேதாந்தங்களும் சர்வ-சகல- ஜாதி -மத – இன – மொழி – பேதங்கள் கடந்த பிரம்மப்பிரகாச ஜீவசிம்மாசன ஞானப்பெரும் பிரணவப்பீடம் அறிந்து கொள்ளவும்,

தொடர்பு கொள்ளவும்.

ஆன்மீகசெம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா அவர்களின் உபதேசமும் ஆதி பொருளை உணர்த்தும் திருவடி தீட்சையும் பெறலாம்!

இந்த உன்னதமான உயர் ஞான சேவையை பிறப்பெடுத்த அனைவரும் பயன்படுத்தி பிறவா வரம் என்ற ஒளி நெறி அடைந்திட வாருங்கள். வருவீர்கள் என்ற நம்பிக்கைளில் வாழ்த்தி வரவேற்கின்றோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top