உறுதி யுணர்த்தல்

 

மஞ்சேர் பிணிமிடி யாதியை நோக்கி வருந்துருமென்
னெஞ்சே  தணிகைய னாறெழுத் துண்டுவெண்  ணீறுண்டுநீ
எஞ்சே விரவும் பகலும் துதி செய் திடுதி கண்டால்
அஞ்சே லிதுசத் தியாமமென சொல்லை அறிந்துகொண்டே
 
தனிகையான ஆறெழுத்து உண்டு! வெண்ணீறு உண்டு! நீ இரவும் பகலும் துதி செய் என்கிறார் வள்ளல் பெருமான். தணிகையான கண்! ஆறெழுத்தை சொல்லச் சொல்லவில்லை! உண்ணச் சொல்கிறார்! ஆறெழுத்தாகிய  சரவணபவ – வில் உள்ள ‘அ’ வாகிய வலது கண் ஒளியை சாப்பிட வேண்டும். எப்படி? சாப்பிட்டால் உள்ளே தானே போகும்! கண் ஒளி உள்ளே போக வேண்டும் அதைத்தான் வள்ளலார் உண்ணவேண்டும் என்றார்.  அதுபோலவே கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்யும் போது ஊற்றெடுக்கும் நீர் தான் வெண்ணீறு என்பதாகும். ஒளி அதிகமாக அதிகமாக அந்த நீரும் உள் ஒளியால் உறிஞ்சப்படும் அதுவே உண்ணுதல்! இரவு பகலாக தவம் செய்தால் கண் ஒளி பெருகும். முதலில் முருகனும் பின்னர் சிவனும் காட்சி தருவர் நம் வினையாவும் தீரும்.

ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா 
திருவருட்பாமாலை

Share

Leave a comment