ஞான பதிவுகள்

கற்றது கை மண்ணளவு – அவ்வையார்

கற்றது கை மண்ணளவு இந்த பழமொழி தெரியாதவனை தமிழனே இல்லை என்று சொல்லலாம்…. ஏன் எனில் அந்த அளவிற்கு இது தமிழில் மிக பிரபலமான மற்றும் உன்னதமான பழமொழி மேலும் எனதருமை ஞான கிழவி அவ்வையின் மொழி. அதுமட்டுமில்லாமல் அவளின் அளவிட முடியாத தன்னடக்கத்தால் இந்த மக்களுக்காக அவ்ள் தூவி விட்ட ஞானத்தில் ஒரு சிறு துளி இந்த “கற்றது கை மண்ணளவு” என்ற பழமொழி. அவளுக்கு வேண்டுமானால் இது சிறு துளியாக இருக்கலாமே தவிர உலக மக்களுக்கும் அதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு இதில் மறைந்துள்ள விடயம் சிறு துளி அல்ல அது பெரு வெள்ளம்.

“கற்றது கை மண்ணளவு” என்ற பழமொழி எந்த அளவிற்கு தமிழில் பிரபலமோ அந்த அளவிற்க்கு இது வெறும் உலகியல் வாழ்க்கை சார்ந்த பழமொழியாக மட்டுமே பயன் படுத்தபட்டு கொண்டிருப்பதை போல வேதனையான விடயம் வேறு இல்லை என சொல்லலாம்.

ஆம், வீட்டில் என்னம்மா இது புது பலகாரம்..னு கேட்டால்…போன வாரம் விஜய் தொலைகாட்சியில் போட்டாண்டா அதான் செஞ்சேன்…அப்பப்பா சமையல்..லதான் எத்தனை வகை…. “கற்றது கை மண்ணளவு” என்று சும்மாவ சொன்னாங்க என்று சொல்ல கேட்டிருக்கிறேன்!!!!

Algebra..ல ஏதாவது கணக்கு தெரியாம முழி பிதுங்ஙி நிக்கும் போது….ஆசிரியர் வந்து அத பயங்கரமா explain பண்ணிட்டு “கற்றது கை மண்ணளவு” தான்ப்பா, ரொம்ப படிச்சுட்டன்னு மிதப்புல இருக்காத தம்பி என்று Algebraa வை கண்டுபிடிச்சதே அவர்தான் என்ற மாதிரி சொல்லிட்டு போவதையும் நாம் கவனித்திருக்கலாம்.

பேஷன் டெக்னாலஜி…லதான் எத்தனை வகை  என்று அங்காலயத்து கொள்ளும் இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்!!!  JAVA programming language..ஐ கடல்…பா அது படிச்சா படிச்சு கிட்டே இருக்கலாம் என்று சொல்லும் கணிணி துறையை சார்ந்தவர்களையும் நாம் பார்த்து இருக்கலாம். இங்கு அவர்கள் கடல் என்று சொல்வது “கற்றது கை மண்ணளவு” என்பததைத்தான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மிக சாதாரனமா நாம் இந்த பழமொழியை கணிணி மற்றும் பேஷன் டெக்னாலஜி போன்ற விடயத்துடன் சம்பந்த்தபடுத்தி பேசுகிறோமே இது சரிதானா என்று நாம் என்றாவது யோசித்து பார்த்து இருக்கிறோமா????

ஞான மூதாட்டியின் காலத்தில் எந்த தொலைகாட்சியும் இல்லை அவள் எந்த சமையல்… நிகழ்ச்சியும் பார்த்திருக்க வாய்ப்பில்லை… அதனால் சமையலை பற்றி அவள் “கற்றது கை மண்ணளவு” என்று சொல்லியிருக்க மாட்டாள்.

அவள் காலத்தில் எந்த விதமான ரசாயன தொழில் நுட்பமோ, விமான தொழில் நுட்பமோ மற்றும் கணிணி தொழில் நுட்பமோ இல்லை….. அய்யோ!!! இதெல்லாம் எதிர் காலத்தில் வர போகிறது இதெல்லாம் நாம் கற்க வில்லையே என அஞ்சியும் அவள் “கற்றது கை மண்ணளவு” என்று அவள் சொல்லவில்லை…..

இளமையிலே முதுமை வரம் வேண்டி பெற்றவள் அவள்!!! அதனால் எந்த விதமான அழகு சம்பந்தமான (பேஷன்) போன்ற விடயத்தையும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை!!!!

எந்த வித நடனமும் ஆட ஆசைபட்டிருக்க மாட்டாள் எனதருமை கிழவி! அப்படி ஆசைப்பட்டிருந்தால்  இளமையிலே முதுமை வரம் வேண்டி பெற்றிருக்க மாட்டாள்.? அதனால் நிச்சயமாக ஆடல், பாடல் போன்ற கலைகளில் நாம் தேர்ச்சி பெற வில்லையே என்று நினைத்தும் அவள் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.

இளமையிலே முதுமை வரம் வேண்டி சதா சர்வ காலமும் இறைவனை நினைத்து தவம் செய்தவள் நிச்சயமாக சமையல், பேஷன், கணிணி, மருத்துவம் மற்றும் Algebra பற்றி எல்லாம் “கற்றது கை மண்ணளவு” என்று சொல்லியிருக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை!!! அவள் தனக்குள்ளேதான் எதையோ கற்று கொண்டாள். அப்படி அவள் கற்று கொண்டதில்தான் “கற்றது கை மண்ணளவு” என்று சொன்னாள்.

ஆனால் நாமோ சதா சர்வ காலமும் அனைத்தையும் புறத்திலே தேடி நமக்கு தேவை இல்லாததை எல்லாம் உலகளவு கற்று கொண்டு எதை கற்று கொள்ள வேண்டும் என்று கூட அறிய முடியாத நிலையில் இருக்கிறோம்!!! இதுதான் இன்று இருக்கும் நிதர்சனமான நிலைமை.

அவ்வை தனக்குள்ளேதான் எதையோ கற்று கொண்டாள் என்று சொல்லி விட்டோம்…… அப்படி என்னதான் கற்று கொண்டாள்?????

“உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம்

உடம்பினுள் உத்தமனை காண்”

இப்படி உடம்பினுள் உத்தமனை தேடி கண்டுபிடிக்கும் காலத்தில்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை இரகசியங்களும் வெளிப்படும்… ஆம், நாம் செய்யும் தவத்திற்கேற்பவே காட்சிகளும், அனுபவங்களும் கிடைக்குமாம். அப்படிப்பட்ட அனுபவத்தின் மூலம்..தான் நாம் இதுவரை தெரிந்து வைத்திருப்பது கைமண்ணளவு…தான் என்று எம் அருமை மூதாட்டியும் தெரிந்து கொண்டாள்.

அந்த அளவிற்க்கு அவள் தவமும் வலுவாக இருந்த்தது!!!!!

வலுவாக இருந்ததால்தான் நாம் கற்றது கைமண்ணளவு இன்னும் கற்க வெண்டியது உலகளவு என்று தெரிந்து கொண்டாள்… இல்லை எனில் இன்றைக்கு இருக்கும் சில குருட்டு மனிதர்களை போல கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருந்திருப்பாள். இப்படி தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்றிருக்கவும் மாட்டாள்.

உடம்பினுள் உத்தமனை நாம் கண்டுபிடிக்க வில்லை எனில் என்னவாகும் என்று அதற்கும் அவளே பதில் சொல்கிறாள்….

என்ன மரணம் தான் நிகழும்!!!!!

ஆம், நான் சொல்ல வில்லை அவ்வை தான் சொல்கிறாள்.

தவம் செய்வோர்க்கு அவம் ஒரு நாளுமில்லை.

தவம் செய்யவில்லை எனில் பாதிப்பு நிகழும் என்று சொல்கிறாள்…. மரணத்தை தவிர ஒரு மனிதனுக்கு என்ன பெரிய பாதிப்பு நிகழ்ந்து விட கூடும்!!!!!

இந்த அவம் என்கிற வார்த்தைக்கு பதிலாகத்தான்….

பல சித்தர்கள் பிறவா நெறி பெற வேண்டும் என்றனர். அதையும் மேலும் அழகாக எமது குரு நாதர் வள்ளல் பெருமான் சொன்னார்…. இறந்தால்தானே அடுத்து பிறப்பு….. அப்படி எனில் எனக்கு இறவா நெறி அளி அதான் மரணமிலா பெருவாழ்வு அளி என வேண்டி பெற்று கொண்டார்.

வேண்டி பெற்று கொண்டார் எனில் தவம் செய்து பெற்று கொண்டார் என்று அர்த்தம்… உடனே நாம் வேண்டினாலும் கிடைக்கும் என்று நினைத்து கொள்ள வேண்டாம்!!!

ஆனால் நமக்கும் கிடைக்கும்!!!! ஆம், தவம் செய்தால் யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம் இறவா நெறி என்கிற மரணமிலா பெருவாழ்வு அதுவே உடம்பினுள் இருக்கும் உத்தமனும் கூட. இதைத்தான் தவம் செய்வோர்க்கு அவம் ஒரு நாளுமில்லை என்று அட்சரசுத்தமாக சொன்னாள் எமது பாட்டி.

எல்லா சித்தர்கள் சொன்னதும் இதைத்தான், வள்ளல் பெருமான் கருனையோடு எல்லோரும் மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் என்றுசொன்னதும் இதுதான் மற்றும் எம் அவ்வை பாட்டி சொன்னதும் இதைத்தான்.

டெல்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்ல தட்டாதிங்க!!!

நாம் பாட்டி சொல்லை தட்டினால்…. மரணம் நம்மை தட்டும்!!!

கேட்டா தப்பிச்சோம்!! கேக்கலைன்னா நாம close!!

தவம் செஞ்ஞா அவம் நிகழாது!!!!!உடம்பினுள் உத்தமனை கண்டு கொள்ளலாம்!!!!

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி

தனிப்பெரும்கருனை அருட்பெரும்ஜோதி

What do you think?