ஞான பதிவுகள்

இறைவனை காண்பவன் யார்?

“நாளும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறுங்
கோலிமேல் நின்ற  குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்துமுதல் இரண்டும்
காலங்கண் டானடி காணுல மாமே”
நாலும், இருமூன்றும் , ஈரைந்தில் கொண்டு சேர்க்கும் . அதாவது இருமூன்று – இரு கண்கள் இரு – மூன்றுவட்டம் கொண்ட கண். நமது இரு கண்வழி தவம் செய்வதால் அதிலிருந்து நாலு கலை பிரிந்து சென்று ஈரைந்து – பத்து. அதாவது பத்தாமிடமான ‘ய’ கார ஸ்தானம் , நம் ஆதமஸ்தானத்தில் சேரும்.
 ஈராறுங்- பன்னிரண்டு கலையுடைய சூரியன் நமது வலது கண். “கோலிமேல் நின்ற குறிகள்” – கோலி போல் சிறுவர்கள் விளையாடுவார்களே கோலிகுண்டு, அதுபோல நமது கண்மணி உள்ளது. நம் பூமியைப் போல உள்ளது. அதில் பதினாறு என்பது இடது கண் சந்திர கலையை குறிக்கும்.
வலதுகலை 12 , இடதுகலை 16  இரண்டும் கோலிபோல் உள்ள கண்மணி அமைப்பு. மூலம் கண் என தெளிவாக கூறுகிறார் திருமூலர். கண்ணை கண்டு, இரு கண் கலையும் உள்ளே முடியும் இடமான அக்னிகலை – ஆத்மஸ்தானம் பத்தாகும். ‘ய’ பத்தாகிய இடத்தை ,16 கலை 12  கலை சேர மீதி உள்ள நாலுகலை கூட நாம் அடையலாம்.
இடது கண் சந்திரகலை சூரியகலை வலது கண்ணை ஊடுருவி உட்புகும்போது எஞ்சிய நாலுகலை இருகண்ணும் உள்ளே முடியும் இடமான பத்தமிடத்தை சேரும். இதுவே தவ அனுபவம். இங்ஙனம் காலங்கடந்த அழிவில்லாத ஜீவா ஆத்மாவை கண்டவன் உணர்ந்தவன் இறைவனை கான்பவனாவான்.

What do you think?