திருஅருட்பா முதல் திருமுறை

33 கையடை முட்டற்க்கு இரங்கல்

 கார்பூத்த கண்டத் தொடுமேவு  முக்கட் கனி கனிந்து
சீர்பூத் தொழுதுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே
பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையேனேன்
ஏர்பூத்த வோண்பளி தம்காண் கிலனதற் கென்செய்வேன்

கார்பூத்த கண்டத்தொரு மேவு முக்கட் கனி – கரிய நிற கண்மணி
மத்தியில் உள்ளே உள்ள மூன்று கண்கனிந்த ! சீர் பூத்து ஒழுகும்
செந்தேனே – பூ பூத்தால் அதில் தேன் இருப்பது போல இறைவன்
நமக்கு அருளிய சீர் – பூ – கண்மலரில் உள்ள ஒளி தவத்தால் இனிமையான
பேரானந்தத்தை கொடுப்பது! தணிகையின் தெள்ளமுதே கண்மணியின் உள்
ஒளியே அமுதமே! பேர் பூத்த ஒற்றியில் உன்முன்ஏற்றிட கற்பூரம்
கிடைக்கவில்லையே என்கிறார். ஒற்றி – திரு ஒற்றியூர்  வெண்பளிதம்
– கற்பூரம் திருவொற்றியூரில் கற்பூரம் கிடைக்கவில்லை என
திருதணிகையில் முறையிட்டரா? வள்ளலார்.  திருதணிகையும் ஊரல்ல!?
திருவெற்றியூரும் ஊரல்ல?! மனம் தணிந்த நிலையே தணிகின்ற கையே
கண்மணி. கண்மணியில் தானே நம் மனம் தணிந்து ஒடுங்கும்! திருவாகிய
இறைவன் ஒற்றியிருக்கும் இடம் நம் கண்மணி உள்ளேதான்- கண்மணி தான்
ஒற்றியூர் எனப்பட்டது!!  இவையெலாம்சங்கேதமொழி. ஞான நிலையை
கூறும் பரிபாசையாகும். ஏர்பூத்த வொண்பளிபாதம் காணவில்லையே
என வள்ளலார் கூறியது கண்மணி உள் ஒளியை – வெள்ளொளியை
– தூய ஒளியை – புகையில்லா ஒளியைத்தான் கிடைக்க வில்லையே
என வருந்தினார். அதாவது சாதனை செய்து செய்து பலகால்
ஆயிற்றே இன்னும் ஒளி தியானம் கிட்ட வில்லையே என அந்த ஒளியாகிய
இறைவனிடமே முறையிடுகிறார்.

கருமருந்தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
அருமருந்தே தணிகாசலம் மேவுமென் ஆருயிரே – பாடல் 2

கருவிழியுனுள் கண்மணியினுள் நாயகன் ஒளி, இதுவே கருமருந்தாய
மணிகண்ட நாயகன் – கண்மணி இதுவே அருமையான மருந்து. நம் பிறவி
பிணி தீர்க்கும் மருந்து, அந்த மருந்தான ஒளி இருப்பது தணிகாசலத்தில் – என்
கண்மணியில் அதுவே என் ஆருயிர். இறைவன் எனக்கு கொடுத்த சீர் – என்
கண்மணி ஒளி, மாமருந்து

காலெடுத் தம்பலதாடும் பிரான் திருக்கண்மணியே – பாடல் 3

அம்பலம் என்றால் எல்லோருக்கும் தெரிந்து விட்டது எனப்பொருள்.
சிவன் எல்லோருக்கும் தெரிந்த கண்மணி உள்ளில் ஆடிக்கொண்திருக்கிறான்.
ஒளியே சிவம் அவன் ஆடுவது கண்மணியே.

கண்ணப்பன்  என்னும் திருப்பெயரால் உலகம் புகழும்
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகன் – பாடல் 4

கண்ணப்பன் – கண்ணை அப்பிய நாயனார் – கண்ணிலே அப்பி வைத்தது
போல் இருப்பவன் உள்ளே இருப்பவன் சிவன். அவன் சிவன் இருப்பது திண்ணமாக! உறுதியாக உள்ளே அப்பியிருக்கிறான். அதனால் சிவனே
நம் திண்ணப்பன். அதாவது நம்மில் இருக்கும் உயிர்  – ஆத்மா ஒவ்வொரு
ஆத்மாவும் திண்ணப்பன் , நாம் வணங்கும் இறைவன் அருட்பெருஞ்ஜோதியின் மகன் முருகன் நம் கண்மணியிலிருந்து வெளிப்படும் ஆறுமுகமான பொருள்! நம் கண்மணி!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

What do you think?