திருஅருட்பா முதல் திருமுறை

நெஞ்சவலம் கூறல்

 

இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன்
ஏழை மார்முலைகே கேவிளைந் துழன்றேன்
பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
பாவி யேன் எந்தப் பரிசுகொண்ட டைவேன்
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர்
அகத்துள் ஊறியே ஆனந்த அமுதே
தொழுது மால்புகழ் தணிகை யென்னரசே
தோன்ற லே பரஞ்சுடர் தரும் ஒளியே

அமுது அமுது கண்ணீர் ஊற்றென பொங்கி வழியும் கண்மணி உள் ஓங்கி
வளர்ந்திடும் ஒளியே! – அமுதமே ! கண்ணனும் வணங்கி  புகழும் கண்மணி
ஒளியே அரசே ! பரஞ்சுடரால்  விளைந்த சுடரே !சஞ்சல மனத்தால் பெண்ணாசையில் சிக்கி தவிக்கும் தடுமாறும் நான் பிறந்தேனே !படரும் கொடியை பார்த்து பாம்பென மயங்கி நின்ற அறியாபாவி என்னை காத்தருள்வாயே!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

What do you think?