தெரிந்து கொள்ளுங்கள்

ஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்

சித்தர்கள்/ஞானியர் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட சொல்கிறார்கள் என்பதும் தெரிந்ததே!

இதையெல்லாம் தாண்டி இவர்களின் பாடல் வரிகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஆம், சித்தர்கள்/ஞானியர் என்றாலே அன்பு, இரக்கம், புலால் மறுத்தல் மற்றும் கொலை தவிர்த்தல் என்ற கொள்கை உடையவர்கள் மேலும் பல அற்புதங்களை செய்வார்கள் என்று தெரிந்திருக்கும் அளவிற்க்கு இந்த இறைவன் திருவடிபற்றி அதிகம் தெரியவில்லை. ஈடு இணையில்லாத இந்த திருவடி தவத்தை செய்த மற்றும் அதை நமக்கும் தந்த எல்லா சித்தர்களின் பாதத்தையும் பணிந்து பதிகிறோம்.

இந்த பதிவில் பார்க்க போவதே எல்லா சித்தர்கள் மற்றும் ஞானிகளின் பாடல்களில் மிளிரும் மெய்யான மெய்பொருளான இறைவன் திருவடிதான். மெய்பொருளான இறைவன் திருவடியை போற்றி பாடாத ஞானியர் இல்லை. இறைவன் திருவடியை பற்றாத ஞானியர் இல்லை.

வள்ளல் பெருமான் “ஞான சரியையில்” மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணருங்கள்” என்று உபதேசித்து உள்ளார் ..

இந்த மெய்ப்பொருளை போற்றி ஞானிகள் பாடிய பாடல்களையும் அதன் விளக்கங்களையும் கீழ்கண்ட கட்டுரைகளில் பார்ப்போம். ஆழ்ந்து படியுங்கள் – மெய்ப்பொருளை அறியுங்கள்

வள்ளலார் மற்றும் சித்தர்களின் திருவடி தவ முறையை அறியாதவர்களுக்கு, ஆன்மீகத்தில் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கு இங்கு போடப்படும் பாடல்களும் விளக்கங்களும் நிச்சயம் உபயோகமாக இருக்கும் மேலும் உங்களுக்கு வள்ளலாரின் மீது நம்பிக்கை இருந்தால் (அ) ஏதாவது ஒரு சித்தரின் மீதோ (அ) ஞானியின் மீதோ (அ) இறைவன் மீதோ  நம்பிக்கை இருந்தால் அவர்களை நினைத்து படித்தால் நிச்சயமாக இது உங்கள் கண்களை திறக்கும்.

திருவடி – மெய்ப்பொருள் ஒரு அறிமுகம் 

திருவடி பற்றி திருமூலர்

திருவடி பற்றி மாணிக்கவாசகர்

திருவடி பற்றி திருவருட் பிரகாச வள்ளலார்

திருவடி பற்றி திருவள்ளுவர்

திருவடி பற்றி தேவாரத்தில்

திருவடி பற்றி ஸ்ரீஆண்டாள்

மெய்ப்பொருள் பாடல்கள் – விளக்கங்கள் 

 

 

What do you think?