ஞான பதிவுகள்

தந்தைக்கு முன்னே – திருமூலர்

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர்

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார் . அந்த பாடலும் அதற்க்கான விளக்கத்தை ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் மந்திர மணி மாலை எனும் புத்தகத்தில் இருந்து கொடுக்கிறோம். யார் இந்த வள்ளலார் மற்றும் சித்தர்கள் சொன்ன ஞான தவத்தை செய்தாலும்  வர கூடிய அற்புத ஞான அனுபவம்.

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.

திருமந்திரம் – .869

உந்திக் கமலம் – உந்தி – வெளியே தள்ளிக் கொண்டிருக்கும் கமலம்  – தாமரை, கண் தானே வீங்கி நம் வயிறு போல முன் தள்ளி உந்தி கொண்டிருக்கிறது! கமலம் என்றால் தாமரை! கண்மலர் என்றே பொருள்! அங்கே உதித்து எழும் சோதி – வலது கண்ணில் சூரியன் உதயம். இடது கண்ணில் சந்திரன் உதயம். அப்படி நம் இரு கண்களிலும் இரு உதயம் உண்டாகிறது! இதுவே இருதயம் என்றம் ஆகிறது! இருதயம் என்றால் இரு உதயமாகிற நம் கண்களே! இது தான் பரிபாஷை!

நம் இரு கண்மணி ஒளியை இணைக்க உள் சேர்க்க குரு உபதேசம் குரு தீட்சை பெற வேண்டும். பின்னரே கண்மணி ஒளியில நினைவை நிறுத்தி உணர்வை எழுப்பி ஒளியை பெருக்கலாம்! இதுவே தவம்! இதுவே அதனை இணைக்கும் சேர்க்கும் மந்திரமாகும்! தந்திரமாகும்! இதை குரு தீட்சை மூலமே அறிய இயலும்! அறிந்து தவம் செய்தால். முதலில் பிறப்பது, முன்னே – நம் முகத்தின் முன்னே தோன்றுவது நம் இரு கண்களே வெள்ளை விழி கருவிழி கண்மணி என மூன்று வட்டம் ஒரு கண். இரு கண்ணும் சேர்ந்து ஆறு வட்டம், இரு கண்களும் ஒளியுடன் நம் முன் பார்க்கலாம்! இரு கண் ஆறு வட்டம் ஆறுமுகம் கொண்ட ஜோதி அதாவது முருகன் பிறப்பான்!

உள்ளே உள்ள ஆத்ம ஜோதியாகிய சிவம் தோன்றும் முன் நம் கண் மணி ஒளி காட்சி கிடைக்கும். இதையே திருமூலர் தந்தையாகிய சிவம் பிறக்கும் முன் மகனாகிய ஆறுமுகன் பிறந்தான் என்கிறார் நயமாக! அழகாக! தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே என்பதன் பொருள் இதுதான்! கொஞ்சம் சிந்தித்தாலே விடை கிடைக்கும்! னு நுனிப்புல் மேய்பவருக்கு பொருள் புரியாது! தந்தைக்கு முன்னரே மகன் எப்படி பிறக்க முடியும்? தந்தை பிறந்த பின் தானே மகன் பிறப்பான்! இது புறப்பொருள்! தந்தையாகிய சிவ ஒளி ஆத்மஸ்தானம்  நமக்கு தோன்றும் முன், சிவம் உள்ளே இருக்க சிவத்தின் முன்னே – முன் பாகத்தில் ஆறு வட்ட இரு கண் ஆறுமுக ஜோதி தோன்றிற்று இதுவே ஞானம்! புராணத்தில் கூட சிவ பெருமானின் ஐந்து முகத்தோடு ஆறாவது அதோ முகமும் சேர்ந்து ஆறுமுக நெற்றி கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப் போறியே சிவபெருமான் முன்பாக ஆறுமுக பெருமானாக  தோன்றினார் அல்லவா? அங்கும் சிவனின் முன்பாக எதிரில் தொன்றியவர்தானே சுப்ரமணியம்!

நமது திருவருட் பிரகாச வள்ளலார் வீட்டில் 9 வயதில் தவம் ஆரம்பித்த போது முதலில் காட்சி கொடுத்தது ஆறுமுகமும் 12 கையும் கொண்ட திருத்தணி முருகன்தானே! இதுவே எல்லாருக்கும் அனுபவமாகும்! சிலர் உணர்வர்! சிலர் உணர மாட்டார்! ஆறுவட்ட ஒளியே இரு கண்ணே ஆறுமுக கடவுளாம்! “ஷண்முகம்” அது உன்முகம்! உன் இரு கண்ணே! எவ்வளவு அற்புதமான பாடல் இது! படித்து பட்டம் பெற்றவர் பொருள் சொல்வார்களா? திரு மந்திரம் ஞான அனுபவ நூல்! குரு வழி வந்தவரே பொருள் அறிவர்!

—————————————————————————————————————————-

தக்கலை பீர் முகம்மது அவர்களும் இதே ஞான அனுபவத்தை படுகிறார். எப்படி?

தந்தைக்கு முன் மகன் பிறந்தான் – பீர் முகம்மது

Reader Comments (1)

  1. T Rajarajeswaran June 1, 2013 at 11:00 am

    A Wonderful Eye Opener

What do you think?