ஞான பதிவுகள்

தைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க!

ஒவ்வொரு தைப்பூசம் தோறும் பலர் ஜோதி தரிசனத்தை கண்டிருக்கலாம். ஆனால் தைப்பூசம் அன்று காட்டப்படும் முதல் ஜோதியில் ஒரு சிறப்பு உள்ளது.

ஆம், தை பூசம் அன்று காலை நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம் பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்.

நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான சபையை கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்

இப்பொழுது நாம் தை பூசம் அன்று வெளியில் நின்று பார்த்தால்….

இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு பக்கம் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் அதாவது மேற்கே சந்திரன் மறையும் கிழக்கே சூரியன் உதயம் ஆகும் போது நடுவில் சத்திய ஞான சபையில் அகண்ட பெருஞ் ஜோதியை ஏழு திரை நீக்கி தரிசனம் காண செய்வித்தார்கள். இதுவே மிகப்பெரிய தத்துவம்.

நாம் நமது வலது கண்ணாகிய சூரிய கலையோடும் இடது கண்ணாகிய சந்திர கலையோடும் ஒளி பொருந்திய அக்னி கலையாகிய மத்தியில் உள்ள பரம்பொருளை தரிசிக்க ஏழு திரைகள் தடையாக உள்ளது. நம்மிடம் உள்ள துர்குணங்களின் கூட்டே ஏழு திரைகள்.

நாம் நம் கண்ணில் ஒளியை பெருக்க பெருக்க நம்மிடம் உள்ள அஞ்ஞானமாகிய இருளாகிய –  ஏழு திரைகள் ஒவ்வொன்றாக நீங்கி முடிவில் ஜோதி தரிசனம் அனுபவத்தில் காணலாம். இதை விளக்கத்தான் வடலூரில் தை பூசத்தன்று ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்.

சூரியனும் சந்திரனும் நம் வலது கண்ணாகவும், இடது கண்ணாகவும் உள்ளன.

இந்த முறை தைப்பூச ஜோதியை வடலூர் சத்திய ஞான சபையில் காண்க! பின் ஜோதியை உங்களுக்குள் காண முயற்ச்சியை மேற்கொள்ளுங்கள் என எல்லாம் வல்ல அருட் பெரும் ஜோதியை வேண்டிகொள்கிறோம்.

What do you think?