ஞான பதிவுகள்

தவம் பற்றிய கேள்விகள் – 2

கேள்வி: சித்தர்கள் எல்லாம் கண்ணை மூடித்தானே செய்தார்கள்? பிறகு எப்படி நீங்கள் கண்ணை திறந்து செய்ய சொல்கிறீர்கள்?

பதில்: நீங்கள் எந்த சித்தர் கண்ணை மூடி செய்வதை பார்த்தீர்கள்?  சொல்லுங்கள் பார்ப்போம்!

இப்படி நீங்கள் பார்க்காத சித்தர்களை பற்றி அதுவும் அவர்கள் கண்ணை மூடித்தான் தவம் செய்தார்கள் என்று உறுதியாக சொல்கிறீர்களே அது எப்படி?

இப்படி காலம் காலமாக மக்கள் மனதில் பற்றியிருக்கும் கற்பனைகளை தான் எங்க்ள் குரு நாதர் புத்தகங்கள் வழியாகவும், விளக்கங்கள் வழியாகவும் வள்ளல் பெருமானின் துணையோடு உடைக்க முயல்கிறார். அதாவ்து கண்ணை திறக்க முயற்ச்சி செய்கிறார்.

கேள்வி: சரி, பெரும்பாலான மக்கள் கண்ணை மூடித்தானே செய்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் கண்ணை திறந்து செய்ய சொல்கிறீர்கள்?

பதில்: நீங்கள் சித்த்ர்களும், வள்ளல் பெருமானும் செய்த தவத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவ்ர்களின் எழுத்துக்களை படிக்க வேண்டுமே தவிர பக்கது வீட்டுகாரன் சொல்வதையோ அல்லது அண்ணன் சொல்வதையோ எல்லாம் கேட்டு செய்வதல்ல தவம். மேலும் பெரும்பாலான மக்கள் செய்வதால் ஒரு விஷயம் சரியாகி விடாது. சித்தர்கள் என்ன சொன்னார்களோ அதை அறிந்து, உணர்ந்து செய்வதுதான் சரியாக இருக்கும்.

கேள்வி: எதை ஆதாரமாக கொண்டு நீங்கள் கண்ணை மூடி செய்ய கூடாது என்று சொல்கிறீர்கள்?

பதில்: மிக நல்ல கேள்வி! நிச்சயமாக ஆதாரத்தை காட்டுகிறோம். ஆனால் அதற்க்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறோம்.

இப்பொழுது ஆதாரம் கேட்ட நீங்கள் முதன் முதலில் தவம் செய்யும் போது எதற்க்காக நாம் கண்ணை மூடி தவம் செய்கிறோம்.  கண்ணை மூடி கொண்டுதான் தவம்  செய்ய வேண்டும்  என்று எந்த சித்தராவது எந்த சித்தர் பாடல்களிலாவது சொல்லியிருக்கிறார்களா இதற்க்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்று நீங்கள் எப்பொழுதாவ்து சிந்தித்து இருக்கிறார்களா?

எங்களுக்கு மிக நன்றாக தெரியும்! நீங்கள் சிந்தித்து இருக்க மாட்டீர்கள் சிந்தித்திருந்தால் கண்ணை மூடியிருக்க மாட்டீர்கள்.

அகத்திய மகரிஷியின் பாடலை எங்கள் ஞான சற்குருவின் “ஞனம் பெற விழி” என்ற புத்தகத்தில் இருந்து கொடுக்கிறோம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்

மாடுநிற்கும் யோகமல்ல வித்தையாச்சு

சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்

சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்

அகத்தியர் “ஞானச்சுருக்கத்தில்” உள்ள இந்த பாடலை படித்த பின்பாவது தெளிவு உண்டாகட்டும். இந்த பாடலுக்கான எங்கள் குரு நாதரின் முழு விளக்கம் இங்கே – அகத்தியர் சொல்லும் மடையர்கள்

அடுத்த பதிவில் கொடுப்போம்.

——————————————————————-

தவம் பற்றிய கேள்விகள் – 1

தவம் எப்படி செய்ய வேண்டும்?

——————————————————————–

Reader Comments (12)

 1. Nila April 1, 2013 at 9:26 am

  ஸ்ரீ ராமகிரிஷன் பரமஹம்சர், விவேகானதர் கண்ணை மூடி க்னோடு தியானம் செய் வது போல் தான் படங்கள் உள்ளன …Comment

  • admin April 2, 2013 at 9:49 am

   கண் திறந்து தான் தவம் செய்ய வேண்டும். அரை கண் திறந்தாலும் சரி , முழு கண் திறந்தாலும் சரி. கண் திறக்கப்பட வேண்டும்.

   மேலும் அரை கண் திறந்து ஒருவர் தனக்குள் பார்க்கும் போது (தவம்) அடுத்தவருக்கு கண் முடியாதாக தான் தெரியும். இதை தான் நீங்கள் படத்தில் பார்கிறீர்கள்.

   சரியை, கிரியை, யோகத்தில் கண் மூடி சாதனை செய்ய படுகிறது.

   இதனால் மரணமில்லா பெருவாழ்வு கிட்டாது. இறைவனை அடையவும் முடியாது.

   கண் மூடி தவம் செய்பவர்கள் கண் மூடி விடுவார்கள்.

   உடலை விடு உயிர் பிரிந்தால் மீண்டும் பிறப்பு உண்டு.
   வள்ளலார் , சித்தர்கள் உரைத்த உண்மை இது.

  • Sriumadevi Srinivasan December 19, 2013 at 7:27 am

   “மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
   மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
   வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
   காலத்தை வெல்லுங் கருத்திது தானே” பாடல் – 583

   மூலத் துவாரத் – கண் மணி

   கண் மணி ஒளியில் உணர்விலேயே நிற்க வேண்டும்.

   மேலைத் துவாரத்தின் – ஆத்ம ஸ்தானத்திலிருந்து மேல் உச்சி வரை செல்லும் வழி ஆரம்பத்தில் மனத்தை வைத்திரு.

   வேல் போல் இரு கண் பார்வை ஒன்றாக்கி உள் ஆத்ம ஸ்தானத்தை நோக்க.

   இமைகள் திறந்து விழிகள் இரண்டும் உள் வெளியில் நிலைத்திருக்குமானால் கண் மணி ஒளி பெருகி உள் சென்று ஆத்ம ஸ்தானத்தை அடைந்து மேலேறி உச்சியை அடையும். அடைந்தவர் காலத்தை வெல்வார்.

   http://www.indusladies.com/forums/posts-in-regional-languages/230265-thirumanthiram-3.html

   Just a small gratitude to ayya from his book “manthira mani maalai”

   Thanks.

   • Sriumadevi Srinivasan December 19, 2013 at 7:31 am

    “இம் முட்டை இரண்டையுங் கட்டிட்டு ஊன்றி இருக்க உடம்பழியாதே” பாடல் – 728

    முட்டை – கண். முட்டை போல் இருப்பதால் முட்டையிலே கரு இருப்பதைப் போல் கண்மணியே கருவிலே உருவான முதல் உறுப்பு. அதில் ஒளி இருக்கிறது. அதுவே கரு.

    இரு கண்ணான இரு முட்டையையும் புறத்தே பார்வை போகாமல் கட்டி அகத்தே செலுத்துவதாகும்.

    இரு கண்களையும் சூரிய சந்திர ஜோதிகளை இணைப்பதே கட்டுவதாகும்.

    இவ்வாறு இரு கண் ஒளியிலும் நினைவை நிறுத்தி உணர்ந்து உள்கொண்டு சேர்ந்தால் சிரஞ்சீவியாகலாம். இவ்வுடம்பு அழியாது.

    • admin December 25, 2013 at 5:39 pm

     Sincerely appreciate your gratitude.

     Thanks.

     Thanga Jothi Gnana Sabai

 2. Sivagnanam April 26, 2013 at 7:49 am

  I tried meditating with eyes open. After some time my own eye is projected in space. Huge gigantic eye ball with beautiful pupa at the centre. Pupa is like sun shining and eyball is gormed with golden streaks. Is this common? Can you please explain what is phenomenon.
  Thanks and best regards

 3. ஞானம் June 28, 2013 at 8:34 am

  தியானம் செய்ய என்ன செய்ய வேண்டும் அறிவுரை

  • admin June 28, 2013 at 9:21 am

   இந்த லிங்கை படிக்கவும்.
   http://tamil.vallalyaar.com/?p=1444
   மேலும் கேள்வி பதில் பகுதியில் 7வத் கேள்வி தெளிவாக விளக்குகிறது
   http://tamil.vallalyaar.com/?page_id=2590
   உங்கள் கேள்விக்கு பதில் இதில் உள்ளது
   வணக்கம்

 4. P.Krishnamoorthi September 19, 2013 at 9:43 am

  i want temple adders

  • admin September 20, 2013 at 6:37 am

   Please call any persons in the contact us page.

 5. admin June 6, 2014 at 11:20 am

  Read this article http://tamil.vallalyaar.com/?p=2384

 6. Name(required) May 31, 2018 at 10:43 am

  சரியான விளக்கம்

What do you think?