திரு அருட்பிரகாச வள்ளலார்
வள்ளலார் (சிதம்பரம் இராமலிங்கம்) 1823 - அக்டோபர் - 05 புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று மருதூரில் பிறந்தார். சிறுவயது முதலே மிகுந்த இறைபக்தி கொண்டவராகவும், கடவுள் மீது நாட்டமுள்ளவராகவும் இருந்தார்.
சென்னை கந்த கோட்டத்தில் 9 வயதிலிருந்தே ஞான பாடல்களை எழுதத் தொடங்கினார். பின்னர் வடலூருக்குச் சென்று திரு-அருட்பா என்ற ஞான நூலில் 6000 மேற்பட்ட தெய்வீகப் பாடல்களை இயற்றினார். பசிக்கு உணவளிக்க சத்திய தர்ம சாலையை நிறுவினார். ஆத்ம ஜோதி தரிசனத்தின் ரகசியத்தை விளக்குவதற்காக சத்திய ஞான சபை நிறுவினார். அதில் சிற்சபை பொற்சபை ஏழுதிரை அமைத்தார். சிற்சபை பொற்சபை (திருவடி) என்பது நம் கண்களை குறிப்பதாகும் 7 திரைகள் கர்மவினை - மாயை - அகங்காரத்தை குறிக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஆத்ம ஜோதி தரிசனம் பெற, ஆன்ம இன்ப சுகத்தை அடைய ஞான சற்குருவிடமிருந்து விடமிருந்து தீட்சை பெற வேண்டும். 7 திரைகளும் உள்ளே திறக்கப்பட்டால், அவர் ஜோதி தரிசனத்தை அனுபவிக்க முடியும். மேட்டுக்குப்பம் - சித்திவளாகம் - வள்ளலார் ஒளியுடல் பெற்ற தலம். வள்ளலார் தனது 51வது வயதில் ஸ்தூல உடலை ஒளிரும் உடலாக உருவாக்கி, கி.பி.1874ஆம் ஆண்டு தைப்பூச நாளில் இறைவனுடன் ஒன்றென கலந்தார். வடலூரில் தை பூசத்தின் போது இந்த அறை திறக்கப்படுகிறது. வள்ளல் பெருமானே சன்மார்க்கம் நடத்துகிறார். வள்ளலாரின் முக்கிய போதனைகள் பசித்தவருக்கு உணவளிப்பது, காலமுள்ள போது ஆன்ம இன்ப சுகத்தை அனுபவிப்பதாகும். இதுவே உண்மையான ஜீவகாருண்யம். பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் துன்பத்திலிருந்து உன் ஆத்மாவைக் கருணையுடன் பார். சுத்த சைவ உணவை உண்ணவேண்டும். புகைபிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது.கடவுளின் பெயரால் விலங்குகளைக் கொல்வது கூடாது சிறுதெய்வ வழிபாடு கூடாது .
ஞான சற்குரு சிவ செல்வராஜ்
ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள், திரு அருட்பிரகாச வள்ளலாரின் அருளைப் பெற்று, திருவடிகளின் ரகசியங்களை மனித குலத்திற்கு வெளிப்படையாகப் போதித்தார்.
அய்யா அவர்கள் தமிழில் 35 ஞான நூல்களை எழுதியுள்ளார். இறைவன் திருவடியை ரகசியத்தை பரசியமாக்கிய முதல் நூல் கண்மணி மாலை. ஒரு சாதாரண மனிதனால் எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையான நடையில் உள்ள இந்த நூல் ஒரு ஆன்மீக புரட்சி . திருவருட்பா, திருமந்திரம், திருவாசகம் மற்றும் 4000 திவ்ய பிரபந்தம் ஆகியவற்றுக்கு அய்யா உரை எழுதியுள்ளார். சில புத்தகங்கள் அவரது சீடர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அய்யா தனது மனைவி தங்கம் அம்மா மற்றும் மகன் சுயம் ஜோதியுடன் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். அய்யா திருவடி ஞானத்தை வெளிப்படுத்த தன் முழு வாழ்வை அர்ப்பணித்தார் . அய்யா அவர்கள் 3000க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு திருவடி தீட்சை அருளினார். ஞானம் பெற்ற அனைத்து சித்தர்கள் மற்றும் திரு அருட்பிரகாச வள்ளலார் அய்யா அவர்களின் அருளால், மகா சமாதி அடையும் முன் தனது ஒன்பது சீடர்களை குரு பீடத்தில் அமர்த்தினார். வள்ளலார் மற்றும் அய்யாவின் அருளால் ஒன்பது குருமார்கள் மூலம் திருவடி தீட்சை வழங்கப்படுகிறது. அய்யா அவர்கள் ஞானத்தை தேடி இறை அடியார்களை சென்று அடைய ஞானதானத்தின் முக்கியத்துவத்தை தனது சீடர்களுக்கு உணர்த்தினார். அவர் சீடர்கள் ஜீவசமாதி குருபூஜை நடக்கும் இடங்களில் சென்று ஞான தானம் செய்து வருகின்றனர். ஒழுக்கம் ஆன்மீக பாதையின் அடித்தளம். மாயையை காமத்தை வெல்ல அனைத்து பெண்களையும் வாலைத் தாயாக கருத வேண்டும், சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. ஆன்மீக சேவைக்கு நாகர்கோவில் தமிழ் பேரவையில் அய்யாவுக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கப்பட்டது. அய்யா தனது நூல்களை இலவசமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களில் ஞான தானம் செய்து உள்ளார்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தங்க ஜோதி ஞான சபை
இறைவன் திருவடிகள் நமது கண்கள்!
கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்வில் இருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலே நிறுத்துவது தான் சாதனை! தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! - திருவடி தவம்
இறைவன் திருவடி நம் கண்கள். நம் தலையின் உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே நம் கண்களில் துலங்குகிறது. ஆத்மாவிலிருந்து இறை ஒளி நேரடியாக வெளிப்படும் உடலில் உள்ள இடம் நம் கண்கள். மனம் வெளிப்படும் இடம் அதுவாகும். முக்தி அடைய அல்லது கடவுளுடன் ஒன்றிணைவதற்காக அனைத்து துறவிகள்/சித்தர்கள் தியானம் செய்த இடம் இதுவாகும்.
இறைவன் திருவடியான நம் கண்களை சூரியன் சந்திரன், 8 2, அ உ, சிவம் சக்தி, சங்கு சக்கரம் புருவமத்தி,இருதயம் என்று பரிபாசையாக குறிப்பிடபடுகிறது. கண்ணன், கண்ணம்மா, கிருஷ்ணமணி, ஆலிலை மேல் நாராயணன், சின்மயம் என்று பரிபாசையாக சொல்வது இறைவன் திருவடியாகிய கண்களில் துலங்கும் உயிர் ஒளியே.
இறைவன் நிலை, நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும்! இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்க்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது ! குரு பார்த்து தேர்ந்தெடுக்கும் உண்மை சீடனே குருவாவார். அப்படிப்பட்ட மெய் குருவை ஞான சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற்றாலே ஞானம் பெற முடியும்!! இறைவன் யார்? நீ யார்? எங்கே இருக்கிறது உயிர்? எப்படி அறிவது? காண தடையாக உள்ளது எது? சும்மா இருப்பது எப்படி? மனம் உதிக்கும் இடத்தில் மனதை நிறுத்துவது எப்படி? இதை தெரிந்து கொள்வது உபதேசம். பிறகு தீட்சை
தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சை பெறுபவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.
ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின்தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும்.
ஒரு ஞானியால் குருபீடத்தில் அமர்த்தப்பட்ட ஒருவர் தான் இந்த தீட்சையினை வழங்க முடியும். சட்சு தீட்சை, நயன தீட்சை, தச தீட்சை என்று கூறுவது திருவடி தீட்சையான இதைத்தான். தீட்சை என்பது அக்னியின் மூலம் ஞானஸ்நானம் பெறுவது, தீட்சை பெற்றவனே துவிஜன் ஆகிறான். துவிஜன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள்.
இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சாம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
தவம் என்றால் மந்திர ஜபமல்ல, தவம் பூஜை செய்வது யாகம் வளர்ப்பது அல்ல, தவம் என்பது பிராணாயாமம் வாசியோகம் இன்னும் பிற யோகங்கள் அல்ல, குரு தீட்சை பெற்று திருவடி மேல் – கண்மணி ஒளி மேல் மனதை வைத்து உணர்வை பெருக்கி கண் திறந்து தவம் செய்ய வேண்டும்!
தூங்கி கிடக்கும் ஆன்மாவை தட்டி எழுப்பவது, கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளியை தட்டி எழுப்புவதே ஞான சாதனை! ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி. ஞான தவம் செய்யும் போது மனதும் பிராணனும் ஒடுங்கும்! இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம். இதுவே தவம். மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.
கூடியிருந்து செய்வது சத்சங்கம்! தனித்திருந்து செய்வது சத்விசாரம். ஞானம் என்பது எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். சத்சங்கத்துவே நிர்சங்கத்துவம், நிர்சங்கத்துவே நிர்முகத்துவம், நிர்முகத்துவே நிர்மலத்துவம், நிர்மலத்துவே ஜீவன் முக்தி, இது ஆதி சங்கரர் சொன்னது. அதே தான் வள்ளலார் சொன்னார், சாதுக்கள் சங்கம் சார்ந்தாலன்றி இது சாராது! நீங்க எவ்வளவு தவம் செய்தாலும் இந்த சத்சங்கம் முக்கியம்.
கட்டுரைகள்
உள்புகு முன்!
தெய்வமணிமாலை
பார்க்க வேண்டிய இடங்கள்
சத்திய தர்மசாலை
சத்திய ஞான சபை
தீட்சை பெற வேண்டிய தகுதிகள்
இறைவன் திருவடியை கண்களை குறிக்கும் பரிபாசை
- எட்டு – இரண்டு
- அ – உ
- சிவம் சக்தி
- சங்கு சக்கரம்
- சூரியன் சந்திரன்
- கண்னன்
- கிருஷ்ணமணி
- இருதயம்
- திரிபுரம்
- திரிவேணி
- தேங்காய் மூன்று கண்
- சிற்சபை பொற்சபை
- குண்டலினி
- திருச்சிற்றம்பலம்
- திருப்பெருந்துறை
- சின்முத்திரை
- காளிங்க நார்த்தனம்
- புருவமத்தி
- துவாரபாலகர்கள்