எங்களைப்பற்றி
தங்க ஜோதி ஞான சபை(அறக்கட்டளை) ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்களால் திருவடி ஞானத்தை உலக மக்களுக்கு கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்டது. திருக்கைலாய பரம்பரை திருமூல நாயனார் மரபில் ஆதிநாயக வழிவந்த ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யாவை குருபீடத்தில் அமர்த்தினார். நமது சபையில் திருவடி உபதேசம் மற்றும் திருவடி தீட்சை வள்ளலார் மற்றும் சிவ செல்வராஜ் அய்யா அருளால் வழங்கப்படுகிறது. புரட்டாசி சித்திரை வள்ளலார் அவதார தினம் மற்றும் தைப்பூச ஞான தானம் சபையில் கொண்டாடப்படுகிறது.
குருவின் சீடர்கள் தமிழகத்தில் உள்ள குருபூஜை நிகழ்வுகளில் கலந்து திருவடி தவம் மற்றும் தானம் மூலமாக இலவச நோட்டீஸ் புத்தகங்கள் கொடுத்து அடியார்களுக்கு ஞானத்தை விளக்கம் கொடுத்து வருகிறார்கள். ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா மகாசமாதி அடையும் முன் 9 சீடர்களை குருபீடத்தில் அமர்த்தி அவர் செய்த பணியை தொடரச் செய்து உள்ளார்கள். சபையின் ஒரே நோக்கம் திருவடி ஞானத்தை மக்களுக்கு/இறை அடியார்களுக்கு எடுத்து செல்வது! சாதி மத வேறுபாடு இன்றி, சுத்த சைவ உண்வு உண்பவர்கள், புகை பிடிக்காதவர்கள், மது அருந்தாதவர்களுக்கு மட்டும் தீட்சை அளிக்கப்படுகிறது.
குருவின் முக்கிய அறிவுரை ஞான தவம், ஞான தானம் மற்றும் சத்சங்கம் செய்வது. இது ஒரு ஆன்மீக புரட்சி, எந்த ஆசிரமமும் சாமியார்கள் சொல்லாத திருவடி ஞானத்தை பாமரன் புரியும் அளவுக்கு குருவின் 35 நூல்கள் எளிமையாக எடுத்து கூறுகிறது. குரு அய்யா தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகத்திற்கு இலவசமாக கொடுத்துள்ளார்கள். தவம் செய்ய வீட்டை விட்டு காட்டுக்கு செல்ல வேண்டியது அவசியம் இல்லை. இப்போது உள்ள தமது கடமைகளை செய்து திருவடி தவத்தையும் செய்து வரவேண்டும். மரணமிலா பெருவாழ்வு பெற வழி காட்டுவதே சனாதன தர்மம். இந்த உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் பொதுவான வாழ்க்கை நெறியே சனாதன தர்மம். எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரும் எல்லாம் வல்ல அந்த பரமாத்மாவின் பிள்ளைகளே - அம்சமே என உரைப்பதே சனாதன தர்மம்! சனாதன தர்மமே சன்மார்க்கம். வேதகாலத்திலிருந்து இன்று வரை வழங்கி வரும் தர்ம நெறி , வாழ்க்கை நெறியே "சனாதன தர்மம்" அதுவே சன்மார்க்கம். எல்லோரும் மறைத்ததை சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தங்க ஜோதி ஞான சபை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கன்னியாகுமரி.திருவடி உபதேசம் – திருவடி தீட்சை – திருவடி தவம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு தொடர்பு கொள்ளவும்