கேள்வி-பதில்கள்

பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.சந்தேகமின்றி – தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவன் தான் ஞானி.இரக்கமே உருவானவன். கருணையே வடிவானவன். எவ்வுயிரையும் தம்முயிர் என கருதுபவன். அவனே ஞானி. எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த ஆதியும் – அந்தமில்லா, கருணை மழையான , வள்ளலான இறைவனை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் ஞானிகள் ஆவர். எல்லாம் வல்ல அந்த இறைவனின் அம்சமே தன் உயிர் என்றும் அந்த உயிர் ஒளியே கண்களில் ஒளியாக துலங்குகிறது என்பதை அறிந்து, உணர்த்து தெளிந்தவன் ஞானி ஆவான்.வள்ளல் யார்? இறைவன் தான்? இவ்வுண்மையை அறிந்தவன் உணருகிறான். உணர்ந்தவன் ஞானி ஆகிறான். ஞானி ஆனவன் “தான் அதுவாகவே” மாறுகிறான். தான் ஆகிய ஆத்மா அதுவாகிய பரமாத்மாவின் இயல்பை பெற்று விடுகிறது.

“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்“. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லலாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.

இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.”நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர். ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.

நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணிற்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்.

நமது வலது கண் 8 என்றும், இடது கண் 2 ஆகவும் குறிப்பிடபடுகிறது. வலது கண் – அ , இடது கண் – ௨ வலது கண் – சூரியன் , இடது கண் -சந்திரன். வலது கண் – சிவம் , இடது கண் – சக்தி வலது கண் – சக்கரம் , இடது கண் – சங்கு

தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை. தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

இப்பதிவில் ஆன்மீகத்தை / ஞானத்தை பற்றிய விவரங்களை கேள்வி பதில்களாக தொகுத்துள்ளோம் . அனைத்தும் எங்கள் குரு நாதர் திரு.சிவசெல்வராஜ் அய்யா ஏற்றிய நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டது. புது கேள்வி பதில்கள் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும். உங்கள் கேள்விகளையும் எங்களுக்கு அனுப்பவும். 1. ஞானம் என்றால் என்ன? ஞானி என்போர் யார்? 2. நம் உடலில் உயிர் எங்கு உள்ளது? 3. மெய்பொருள், திருவடி என்பது என்ன? 4. எட்டு (8), இரண்டு (2) எதை குறிக்கிறது? 5. திருவடி தீட்சை என்றால் என்ன? 6. தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்? 7. தவம் செய்வது எப்படி? 8. சற்குரு என்பவர் யார்? குருவின் முக்கியத்துவம் என்ன? 9. வினை அல்லது கர்மம் என்றால் என்ன? 10. வினையை – விதியை மதியால் வெல்வது எப்படி? 11. வடலூர் சத்திய ஞான சபை “ஜோதி தரிசனம்” எதை குறிக்கிறது? 12. குருடர்கள் ஞானம் பெற முடியுமா? 13. திருவடி உபதேசம் தீட்சை எப்படி பெறுவது? 14. திருவடி உபதேசம் தீட்சை எங்கு சென்று பெறுவது ? 1. ஞானம் என்றால் என்ன? ஞானி என்போர் யார்? பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.சந்தேகமின்றி – தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவன் தான் ஞானி.இரக்கமே உருவானவன். கருணையே வடிவானவன். எவ்வுயிரையும் தம்முயிர் என கருதுபவன். அவனே ஞானி. எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த ஆதியும் – அந்தமில்லா, கருணை மழையான , வள்ளலான இறைவனை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் ஞானிகள் ஆவர். எல்லாம் வல்ல அந்த இறைவனின் அம்சமே தன் உயிர் என்றும் அந்த உயிர் ஒளியே கண்களில் ஒளியாக துலங்குகிறது என்பதை அறிந்து, உணர்த்து தெளிந்தவன் ஞானி ஆவான்.வள்ளல் யார்? இறைவன் தான்? இவ்வுண்மையை அறிந்தவன் உணருகிறான். உணர்ந்தவன் ஞானி ஆகிறான். ஞானி ஆனவன் “தான் அதுவாகவே” மாறுகிறான். தான் ஆகிய ஆத்மா அதுவாகிய பரமாத்மாவின் இயல்பை பெற்று விடுகிறது. 2. நம் உடலில் உயிர் எங்கு உள்ளது? “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்“. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லலாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர். “உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல். 3. மெய்பொருள், திருவடி என்பது என்ன? இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.”நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர். ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான். நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணிற்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் – Click Here திருவருட்பாவில் வள்ளலார் – Click Here திருமந்திரத்தில் திருமூலர் – Click Here திருக்குறளில் திருவள்ளுவர் – Click Here சித்தர்கள் திருவடி – Click Here 4. எட்டு (8), இரண்டு (2) எதை குறிக்கிறது? நமது வலது கண் 8 என்றும், இடது கண் 2 ஆகவும் குறிப்பிடபடுகிறது. வலது கண் – அ , இடது கண் – ௨ வலது கண் – சூரியன் , இடது கண் -சந்திரன். வலது கண் – சிவம் , இடது கண் – சக்தி வலது கண் – சக்கரம் , இடது கண் – சங்கு 5. திருவடி தீட்சை என்றால் என்ன? தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை. தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன். நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார். “அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான். 6. தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்? தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி : 1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.((முட்டையும் அசைவ உணவே). 2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விட்டு நீங்க வேண்டும். 3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். 4 . பலி கொடுக்கப்பட்டும் கோயில்களுக்கு செல்லவோ அல்லது அதில் பங்கு கொள்வதோ கூடாது. 5 . சிறு தெய்வ வழிபாடு செய்ய கூடாது. சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.

இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.

தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.

கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமில்லா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்.

“மாதா, பிதா, குரு தெய்வம்”.

ஒருவருக்கு தாயும் , தந்தையும் இயற்கையாக கிடைத்து விடுகிறது. தாய் தந்தை பெற்ற நாம் ஒரு குருவை அடைந்து உபதேசம் , தீக்ஷை பெற்று தவம் செய்தே இறைவனை அடைய வேண்டும். இதுவே இறை விதி.

குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும் குருவை தேடி சென்று நல்ல சீடர்களாக இருந்தார்கள்.

இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.

அருணகிரிநாதருக்கு முருக பெருமானே குருவாக வந்தார்.

வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.

குருவின் முக்கியதுவத்தை உணர்த்த சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தியாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.

இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும் இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில் தானே குருவாகி தன்னை அடைய வழி காட்டினான். நம் அனைவர்க்கும் இது பொருந்தும்.

நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல விசயங்களை கற்று கொடுத்துள்ளது. இவைகளை எல்லாம் நமக்கு உலகியல் விசயங்களை மட்டும் தான் கற்று கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம் ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.

யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்கின்றாரோ அவரே குரு ஆவார். நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை அம்சம் ) பற்றி சுரிதி, யுக்தி மற்றும் வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன் துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ அவரே சத்குரு. இந்த சத்தியத்தை உணர நம் கண்களுக்கு உணர்வு கொடுத்து(தீக்ஷை) , தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு. இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான்.

(ஞான சற்குரு சிவசெல்வராஜ் அவர்களை தெரிந்து கொள்ளுங்கள்)

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே அதாவது இறைவனின் அம்சமே நமது உயிர். இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும், மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர் ஆரோகியமாகவும் மற்றொருவர் ஊனமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது ஏன்? நம் பிறப்பை , இறப்பை நிர்ணயிப்பது எது?

இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு முன் பற்பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே தான்.அவரவர் தனது மனதினால், வாக்கினால், உடலினால் செய்த செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது.

இதுவே இறைநியதி.

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு,கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் – விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க செய்துள்ளார்.

பிறப்பின் ரகசியம் இது.

இப்பிராரத்துவ வினைகள் போக மீதம் உள்ளது சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும். பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும். பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ, அதாவது புண்ணியம் செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம்.

இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே.

மதி என்றால் “அறிவு” என்று பொருள். மற்றோரு பொருள் “சந்திரன்” என்பது ஆகும். நமது விதியை ஆகாயத்தில் உள்ள சந்திரனை கொண்டு வெல்ல முடியும் என்று ஞானிகள் சொல்லவில்லை. பின் இதன் பொருள் என்ன?

நமது உடலில் இடது கண் சந்திரன் என்று கூறபட்டுள்ளது. இந்த சந்திரனை நோக்கி அதாவது நமது மனதை திருவடியில் இருத்தி தவம் செய்தால் நாம் நம் விதியை வெல்லலாம்.

நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தில் துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

குருவிடம் தீட்சை பெற்று நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும்.

வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.

ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறி அருளிய வள்ளலார் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே ஞான சபை.

சத்திய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது. நம் தலை அமைப்பை ஒத்தது. சத்திய ஞான சபையில் முன்னே இருபுறமும் சிற்சபை , பொற்சபை உள்ளது. உள் நடுவே ஞானசபை உள்ளது.

இருபுறம் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது. உள் நடுவே உள்ள ஞான சபை நம் அக்னி கலை கொண்ட ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.

ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகளாக அமைந்து நமது ஆன்ம ஜோதியை மறைத்து உள்ளது. இவ்வேழு திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம்.

நம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது. வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள், விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

குருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும். பின்னர் உள்ளே உள்ள ஆன்ம ஜோதி தெரியும்.

குருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார். தைபூசம் அன்று ஞானசபையில் ஒவ்வொன்றாக எழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

மேலும் தை பூச தினதன்று ஜோதி காண்பிக்கப்படும் நேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும். நமது உடலில் வலது கண் சூரியனையும் இடது கண் சந்திரனையும் குறிக்கும்.நமது உடலிலும் வலது கண் ஒளியும், இடது கண் ஒளியும் தவத்தினால் ஒன்று சேர்ந்து, உள் சென்று அக்னி கலையோடு சேரும் போது நமக்கு நமது ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும்.

இதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில் “சூடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” என கூறிப்பிடுகிறார் “சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.

சத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொதிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று. இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.

அன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி அகவினத்தாராக மாறுங்கள். வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள். குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் காணுங்கள். வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்.

நம் உயிரை பற்றி உள்ள வினைத்திரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது. இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை – கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. அதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே. ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம். எங்கள் ஞான சற்குரு திரு.சிவசெல்வராஜ் அய்யா 2 கண் இல்லா அன்பர்களுக்கு தீட்சை தந்து உள்ளார்.

குருவை நேரில் சந்தித்து தீட்சை பெறலாம். கீழ் காணும் ஊர்களில் உபதேசம் தீட்சை பெற்று கொள்ளலாம்.

  1. வடலூர்
  2. சென்னை
  3. காஞ்சிபுரம்
  4. கடலூர்
  5. கும்பகோணம்
  6. திருச்சி
  7. ஓசூர்
  8. பெங்களுரு
  9. கோயம்புத்தூர்
Toggle Content
Share