சற்குரு சிவசெல்வராஜ் ஐயா ஞான நூற்கள்

எங்கள் குருநாதர் ஆன்மிக செம்மல் திரு. சிவசெல்வராஜ் அவர்கள் இதுவரை தங்க ஜோதி ஞான சபையின் வாயிலாக கீழ்க்கண்ட நூல்களை வெளியிட்டுள்ளார்கள். (ஞான சற்குரு சிவசெல்வராஜ் அவர்களை தெரிந்து கொள்ளுங்கள்)

உலகில் இது வரை இரகசியமாக இருந்து வந்த ஞான இரகசியங்கள் , பரிபாசை விளக்கங்கள் எல்லாம் இந்நூற்களில் அனைவரும்எளிதாக புரியும்படி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உலகில் இது வரை தோன்றிய சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் இறைவனை அடைய தவம் தான் செய்தனர். அனைவரும்செய்த தவம் ஒன்றே தான்.

தன்னுள்ளே தான் முதலில் ஆண்டவனை காண வேண்டும். அதற்கு தடையாக உள்ள நம் வினை தீர ஞான தானம், ஞான தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்து தன்னை உணர்ந்து , தலைவனை உணர்ந்து இறவாநிலைபெற்ற சித்தர்கள் , ஞானிகளின் பாடல்களை கொண்டு ஞானம் பெற வழி விழி தான் என்று உரைக்கும் நூல்கள்.

புத்தகம் பெற விரும்புவோர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

=============================================================================
1 . கண்மணி மாலை – ஆன்மிக புரட்சி ஆரம்பமானது.

உலகில் இது நாள் வரை இருந்த ஞான ரகசியங்கள் எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் படியாக எளிமையான நடையில் வள்ளல் பெருமான் மற்றும் அனேக சித்தர்களின் ஆசியால், சித்தர்கள் ஞானிகளின் பாடல்களை மேற்கோள் காட்டி 1992 ம் ஆண்டு வெளியானது. விழியின் வழியே எல்லா ஞானிகளும் இறைவனை அடைந்தனர் என்று அறுதியிட்ட நூல். இந்நூலின் பெருமையினை வள்ளல் பெருமான் 150 ஆண்டுகள் முன்னரே ஒரு கவி பாடி கண்மணி மாலை என்னும் இந்நூலுக்கு சிறப்பு சேர்த்து விட்டார்கள்.

“கண்ணுதலே நின் அடியார் தமையும் நோக்கேன்
கண்மணிமா லைக் கெனினும் கனிந்து நில்லேன்” – திருவருட்பா 1371

அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் இது.

முதல் பதிப்பு வெளியான ஆண்டு – 1992
காணிக்கை – 50 ரூபாய்.

2. அருள்மணி மாலை :- ஆன்மிக தெளிவு தருவது.

இந்நூல் இறைஅருள் பெற விரும்பும் ஒவ்வொருவரும் படித்து உணர வேண்டிய ஒப்பற்ற ஞான நூல்.

எவ்வித பேதமுமின்றி உலக மக்கள் அனைவரும் படித்து உணர வேண்டிய உயர்ந்த ஞான கருத்துக்களை கொண்டது இந்த அருள் மணி மாலை.

முதல் பதிப்பு வெளியான ஆண்டு – 2004
காணிக்கை – 50 ரூபாய்.

3. ஸ்ரீ பகவதி அந்தாதி :

உலகீன்ற அன்னை. எவ்வுயிர்க்கும் தாய். எல்லா உயிருள்ளும் சக்தியாக ஒளிர்பவள், ஆதி சக்தி, உலக அன்னை , வாலைக்குமரி, கன்னியாகுமரி அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் பொற்பாதம் பணிந்து, அவள் தரிசனம் பெற்று அவள் அருளாலே எங்கள் குருநாதரால் பகவதி அம்மன் – வாலை அன்னையை போற்றி எழுதிய அந்தாதி பாடல்கள்.

முதல் பதிப்பு – 2004
காணிக்கை – 25 ரூபாய்

4. அஷ்ட மணி மாலை – 8 நூற்கள்:

சன்மார்க்க குருக்களுக்கு.

1995 , 1996 , 1997 மூன்று வருடங்களில் எங்கள் குருநாதரால், எங்கள் குருநாதரின் வாழ்வில் உதவிய ஞானிகளை பற்றி ஏராளமான கவிதைகள் வெளியிட்டார். அதில் 8 நூற்கள் வெளியானது. 10 வருடங்கள் கழித்து மீண்டும் அந்த நூற்கள் அனைத்தையும் ஒன்றாக்கி ” அஷ்ட மணி மாலை ” என்று வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பதிப்பு : 2006
காணிக்கை : 50 ரூபாய்

5. ஜோதி ஐக்கூ அந்தாதி :

சித்தம் தெளிந்த சித்தர்களுக்கு

எல்லா ஞானிகளுக்கும் வணக்கம் சொல்ல எங்கள் குருநாதரால் எழுதி வெளியிடப்பட்ட நூல். 101 ஐக்கூ கவிதைகள் , 101 தெய்வ திருவுருவங்களை தாங்கி வருகிறது.

முதல் பதிப்பு : 2006
காணிக்கை : 100 ரூபாய்

6. சனாதன தர்மம்:

சித்தர் வழியில் சிவசெல்வராஜ்

ஞானிகள் உரைத்த சனாதன தர்மத்தை விளக்கும் நூல். இந்தியா உலகிற்கு அளித்த கொடை சந்தன தர்மம்

“சனாதன தர்மமே சன்மார்க்கம்! சாகாதவனே சன்மார்க்கி” என்ற உண்மையை உரைக்கும் நூல். இந்நூல் எங்கள் குருநாதரின் பொன்விழா ஆண்டில் வெளியானது.

முதல் பதிப்பு : 2007
காணிக்கை : 50 ரூபாய்

7. வள்ளல் யார் ?:

சனாதன தர்மம் உரைப்பது

வள்ளல் யார்? இறைவன் தான். இவ்வுண்மையை அறிந்தவன் உணருகிறான்! உணர்ந்தவன் ஞானியாகிறான். ஞானியானவன் தான் அதுவாகவே மாறுகிறான். தான் ஆகிய ஆத்மா அதுவாகிய பரமாத்மாவின் இயல்பை பெற்று விடுகிறது.

வள்ளலான இறைவனை உணர்ந்த மெய்ஞானி வள்ளலாகிறார். 19 இம் நூற்றண்டிலே இப்படி ஒரு வள்ளல் தமிழ்நாட்டில் பிறந்து – வளர்ந்து- வாழ்ந்து- எல்லோருக்கும் வழி காட்டி – விழிகளின் மேலாண்மையை உணர்த்தி – வள்ளலாராக – இன்றும் – “அது”வான தன்மையான ஒளியாகி பேரொளியாகி எங்கும் நிறைந்திருகிறார்.

திரு அருட் பிரகாச வள்ளலார் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இராமலிங்க சுவாமிகள் அவர்கள் உரைத்த வழி – அவ்வழி – நல்வழி – எவ்வழி என உரைப்பதே இந்நூல்.

முதல் பதிப்பு : 2008
காணிக்கை : 50 ரூபாய்

8. இயேசு எழுபது:

சனாதன தர்ம நெறி வழியில்

தேவ மைந்தன். ஒப்பற்ற ஞானி. வாழையடி வாழையாக உலகை உய்விக்க வந்த மகான். 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இறைத்தூதர். இயேசுவின் பெருமையினையும் , பைபிளின் ஞானம் சன்மார்கமே என பறைசாற்றும் நூல்.

முதல் பதிப்பு : 2008
காணிக்கை : 25 ரூபாய்

9. ஞானக்கடல் பீர்முஹம்மது

சனாதன தர்மம் இதுவே

ஞானம் மதத்திற்கு அப்பாற்பட்டது. இதன் சான்றே இப்புத்தகம்.
தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா அவர்கள் எழுதிய பாடல்களுக்கான மெய்ஞான உரை. எம்மதம் என்றாலும் ஆண்டவனை அடைந்த அனைவரும் செய்த ஞான சாதனை ஒன்று தான், கண்ட காட்சிகள் , கொண்ட அனுபவங்கள் ஒன்றே. இதற்கு சான்றே பீர் முஹம்மது ஒலியுல்லா அவர்கள் எழுதிய பாடல்கள். படித்து பண்பெற்று மத பேயை விரட்டுங்கள்.

முதல் பதிப்பு : 2008
காணிக்கை : 50 ரூபாய்

10. திருவருட்பா மாலை – முதல் பகுதி

திருவருட்பா மெய்ஞான உரை – முதல் பகுதி

இறைவன் நாம்முள் இருக்கும் பாங்கினை உணர்த்துவதில் – சற் பாத்திரமான – நேத்திரத்தில் நின்றிலங்கும் தன்மையை சுடிக்காட்டுவதில் – “பா” திறத்தில் சிறந்து விளங்கும், திருஅருட் பிரகாச வள்ளல் பெருமான் அருள் திறத்தால் நமக்கு கிடைத்த திருவருட்பா முதல் பகுதியின் மெய்ஞ்ஞான உரை.

முதல் பதிப்பு : 2008
காணிக்கை : 50 ரூபாய்

11. திருவருட்பா மாலை – இரண்டாம் பகுதி

திருவருட்பா மெய்ஞான உரை – இரண்டாம் பகுதி

இறைவன் நாம்முள் இருக்கும் பாங்கினை உணர்த்துவதில் – சற் பாத்திரமான – நேத்திரத்தில் நின்றிலங்கும் தன்மையை சுடிக்காட்டுவதில் – “பா” திறத்தில் சிறந்து விளங்கும், திருஅருட் பிரகாச வள்ளல் பெருமான் அருள் திறத்தால் நமக்கு கிடைத்த திருவருட்பா இரண்டாம் பகுதியின் மெய்ஞ்ஞான உரை.

முதல் பதிப்பு : 2009
காணிக்கை : 50 ரூபாய்

12. திருவருட்பா மாலை – மூன்றாம் பகுதி

திருவருட்பா மெய்ஞான உரை – மூன்றாம் பகுதி

இறைவன் நாம்முள் இருக்கும் பாங்கினை உணர்த்துவதில் – சற் பாத்திரமான – நேத்திரத்தில் நின்றிலங்கும் தன்மையை சுடிக்காட்டுவதில் – “பா” திறத்தில் சிறந்து விளங்கும், திருஅருட் பிரகாச வள்ளல் பெருமான் அருள் திறத்தால் நமக்கு கிடைத்த திருவருட்பா மூன்றாம் பகுதியின் மெய்ஞ்ஞான உரை.

முதல் பதிப்பு : 2009
காணிக்கை : 50 ரூபாய்

13. திருவருட்பா மாலை – நாலாம் சாறு

திருவருட்பா மெய்ஞான உரை – நாலு , ஐந்து மற்றும் ஆறாம் திருமுறை

இறைவன் நாம்முள் இருக்கும் பாங்கினை உணர்த்துவதில் – சற் பாத்திரமான – நேத்திரத்தில் நின்றிலங்கும் தன்மையை சுடிக்காட்டுவதில் – “பா” திறத்தில் சிறந்து விளங்கும், திருஅருட் பிரகாச வள்ளல் பெருமான் அருள் திறத்தால் நமக்கு கிடைத்த திருவருட்பா நாலு , ஐந்து மற்றும் ஆறாம் திருமுறை பகுதியின் மெய்ஞ்ஞான உரை.

முதல் பதிப்பு : 2009
காணிக்கை : 100 ரூபாய்

14. சாகா கல்வி

மரணமில்லா பெருவாழ்வு பெற

“சாகாக்கல்வி” – சாகாத நிலை பெற்றவர்கள் உபதேசித்தது. ஞானிகள் என்பர். சித்தர்கள் என்பர். சாதாரண சாராசரி மனிதர்கள் அடைய முடியுமா? ஆம் முடியும். சாவா நிலை பெற்ற சிரஞ்சீவியர் நம் மீது கருணை கொண்டு உபதேசித்து உள்ளார்கள்.

சித்தர்கள் உபதேசித்த “சாகா கல்வி” இதுவே என்று சித்தர்கள் பாடல்கள் கொண்டு உரைநடையாக இந்நூல் வழங்குகிறது. அனைவரும் மரணமில்லா பெறு வாழ்வு பெற வழிகாட்டும் நூல் இது.

முதல் பதிப்பு : 2009
காணிக்கை : 50 ரூபாய்

15. மந்திர மணி மாலை

ஆன்மிக நிலை உயர – திருமந்திரத்தின் மெய்ஞான உரை

சாத்திரத்தில் சிறந்த திருமந்திரம் திருமூலர் பெருமானால் நமக்கு வழங்கப்பட்ட கொடை. தமிழ் வேதம். இந்நூலின் ஞான பாடல்களுக்கான மெய்ஞான விளக்க உரை கொண்டது “மந்திர மணி மாலை”.

முதல் பதிப்பு : 2010
காணிக்கை : 100 ரூபாய்

16. திருவருட்பா தேன்

திருவருட் பிரகாச வள்ளலார்

வள்ளலார் அருளிய பாமாலைகளில் தலையானது. திருவருட்பாவின் சாரம் அருட்பெரும்ஜோதி அகவல். மக்கள் படித்து பயனுற “அருட்பெரும் ஜோதி அகவலை” திருவருட்பா தேன் என்று நூலாக வெளியிட்டுளோம்

முதல் பதிப்பு : 2010
காணிக்கை : இலவச வெளியீடு

17. அகர உகர மாலை

ஆறு ஞான நூல்களின் தொகுப்பு

எங்கள் குரு நாதரின் வாழ்வில் உதவி புரிந்த சித்தர்கள், மகான்கள் அனைவரையும் போற்றி நன்றி தெரிவித்து வெவ்வேறு காலங்களில் எழுதிய நூல்களும், பாடல்களையும் தொகுத்து ஒரே நூலாக இந்நூல் வழங்குகிறது.

முதல் பதிப்பு : 2010
காணிக்கை : 100 ரூபாய்

18. ஞான மணி மாலை

ஞானம் தருவது

எங்கள் குருநாதர் எழுதிய செந்திலாண்டவர் பாமாலை, சன்மார்க்க தெய்வம், சற்குரு கோவிந்த சுவாமிகள், அருட்பெரும்ஜோதி அகவல் ஆகிய நான்கு ஞான நூற்களின் தொகுப்பே இந்நூல்.

முதல் பதிப்பு : 2010
காணிக்கை : 50 ரூபாய்

19. திருவாசக மணி மாலை

தோத்திரத்தில் சிறந்தது

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்று வள்ளலாரால் பாராட்டபட்ட உயர்ந்த நூல் திருவாசகம். மாணிக்கவாசக பெருமானால் உரைக்கப்பட்டு இறைவனால் எழுத பட்ட சிறப்பு கொண்டது திருவாசகம். திருவாசகத்தின் மெய்ஞான உரையை கூறுவது இந்நூல். அனைவராலும் படிக்கப்பட வேண்டிய நூல் இது.

முதல் பதிப்பு : 2011
காணிக்கை : 100 ரூபாய்

20. பரம பதம் எட்டெழுத்து மந்திரம் அ

எட்டெழுத்தை உணரலாம்

அழ்வார்களால் நமக்கு அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மெய் ஞான உரை. கண்ணான கண்ணன் கண்ணில் துலங்கும் பாங்கினை பக்தியாலும் , ஞானத்தின் மூலமும் ஆழ்வார்கள் வெளிபடுத்திய திறனை கூறும் உயர்ந்த நூலே திவ்ய பிரபந்தம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் தெய்வீக பாடல்களை – ஞான சாற்றை மெய்ஞான உரையாக விளக்கும் நூல் இது.

மெய்ஞானம் மதத்திற்கு அப்பாற்பட்டது. ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை ஆழ்வார்களின் பாடல்களின் மூலம் விலகும் நூல்.

முதல் பதிப்பு : 2012
காணிக்கை : 100 ரூபாய்

21. ஆன்ம நேய ஒருமைப்பாடு
ஆன்மநேயம் ஏற்பட

வள்ளல் பெருமான் மற்றும் சித்தர்கள் சொன்ன ஆன்மநேயம் பற்றி கூறும் நூல். மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைவனை அடைய ஞானிகள் , சித்தர்கள் சொன்ன வழிமுறைகள் தொகுத்து கூறும் நூல் இது. வள்ளல் பெருமான் அமைத்த சத்தியஞான சபையின் விளக்கம் , வள்ளல் பெருமான் நமக்கு குருவாக அமையும் பாங்கினையும் , வள்ளல் பெருமான் பெற்ற பேற்றையும் விலக்கும் நூல் இது.

எல்லா மக்களும் அவசியம் தெரிந்து கொள்ள சிறு நூலக இலவசமாக வழங்கபடுகிறது.

22. வாலை கன்னி ‘ய’ குமரி – ஞானம் பெற விழி

ஆத்ம சாதகர்கள் சக்தியை வாலையை போற்றி அருள் பெற்று அமுதம் உண்டே ஞானம் பெற முடியும். வாலையின்றி ஞானம் இல்லை. எல்லாம் வல்ல ஆண்டவன் தாயக , ஞானம் கொடுக்கும் சக்தியாகத்தான் நமக்கு அருள்வார். வாலையை – சக்தியை – கன்னியாகுமரியை பாடாத சித்தர்கள் ஞானிகள் இல்லை.

பக்தி, பண்பு, தவம் மூலமே நம் சிரநடுவில் ஆன்ம ஸ்தானத்தில் – இரு கண்கள் உட்சேரும் இடத்தில் குடிகொண்டு உள்ளால் மனோன்மணி தாய்.

தாயின் தரிசனம் பெற, அருள் பெற நம் மனதை நம் மணியில் (கண்மணியில்) நிறுத்தி தவம் செய்ய வேண்டும் என்பதை அகத்தியர், வள்ளலார் முதலிய அனேக சித்தர்கள் பாடல்களை கொண்டு – ஞானம் பெற வழி – விழித்தான் என்பதை பகரும் நூல். அனைவரும் படிக்க வேண்டிய நூல்

முதல் பதிப்பு : 2012
காணிக்கை : 100

23. ஜீவகாருண்யம்
உன் ஜீவனை கருணையோடு பார்

“ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்”. ஜீவகாருணியம் வெறும் அன்னதானத்துடன் முடிவது அல்ல. பிறப்பு இறப்பு சுழலில் சிக்கயுள்ள ஜீவனுக்கு பரமாத்மாவை அடைய வழி காட்டுவது தான் உண்மையான ஜீவகாருணியம். ஜீவகாருணியம் முதலில் நம் ஜீவனிடம் ஆரம்பிக்க வேண்டும். வள்ளல் பெருமான் எழுதிய “ஜீவகாருணிய ஒழுக்கத்தின்” சாரம் இந்நூல்.

முதல் பதிப்பு : 2012
காணிக்கை : இலவச வெளியீடு

23. மூவர் உணர்ந்த முக்கண்
தேவாரத்தின் மெய்ஞான உரை

திருஞான சம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் இறைவனை போற்றி, தாங்கள் அடைந்த ஞானத்தை எல்லோரும் அறிய பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம். தேவாரத்தின் ஞான பாடல்களின் மெய்ஞான உரை “மூவர் உணர்ந்த முக்கண்”.

முதல் பதிப்பு : 2012
காணிக்கை : 100

24. Spiritual Education For Deathlessness

எங்கள் குருநாதர் இயற்றிய சாகா கல்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

முதல் பதிப்பு : 2012
காணிக்கை : 100

25. Who is Philanthropist Vallalar

எங்கள் குருநாதர் இயற்றிய “வள்ளல் யார்?” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

முதல் பதிப்பு : 2012
காணிக்கை : 100

26. Sanatana Dharma

எங்கள் குருநாதர் இயற்றிய “சனாதன தர்மம்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

முதல் பதிப்பு : 2013
காணிக்கை : 100

27.உலககுரு திரு அருட்பிரகாச வள்ளலார்

வள்ளலார் அவதார தினமான புரட்டாசி சித்திரை (06-10-13) அன்று வெளியிடப்பட்ட நூல். வள்ளலார் பற்றிய வரலாறும், அவர் அருளிய உபதேசங்களும், வள்ளலார் எதற்காக உலக குரு எனப்படுகிறார் போன்றவைகளை கொண்ட நூல்.

இந்நூல் வெளியிடு நாள் அன்று நடந்த ஆன்மிக சொற்பொழிவில் கலந்து கொண்ட அனைவர்க்கும் இந்நூல் இலவசமாக வழங்கப்பட்டது.

முதல் பதிப்பு : 2013

காணிக்கை : 10

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

Share

Leave a comment