ஞான பதிவுகள்

ஈசத்துவம்(Eesathuvam)

ஈசத்துவம்

திருமூலர் திருமந்திரத்தின் ஆரம்பத்தில் உலக பொது விசயங்களை நன்னெறிகளை ஞானம் கலந்து உறைக்கிறார். சரியை, கிரியை, யோகம் அனைத்தும் கூறி முடிவில் ஞானத்தை  பூரணமாக உறைகின்றார். அனைத்து சித்தர்களும் சன்மார்க்கத்தையே போதிக்கின்றனர்.
“ஈசன் அது இது என்பார் நினைப்பிலார்”


எல்லாம் வல்ல ஈசன் ஈசத்துவம் பெற்றதால் – எங்கும் நிறைந்த தன்மை பெற்றதால் ஈசன் என்பார். அந்த ஈசன் இறைவன் அது இது என வெறும் வாயால் பிதற்றுவர் உண்மை அறியார். இதயத்தில் நினைக்காதவர்களுக்கு ஈசன் தென்பட மாட்டார்.
“ஊனமர்ந்தோரை உணர்வது தானே”
இறைவன் மனித தேகத்தில் “ஊன்” கண்ணில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என்பதை உணர வேண்டும். இம்மானிட பிறவி எடுத்ததன் பயன் இதுவே.
“சோதித்த பேரொளி  மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவதறிகிலர்   ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித் தவரைப் பிதற்று கின்றாரே”


எல்லாம் வல்ல இறைவன் பேரொளி . அதன் ஒரு சிறு சோதியானது மூன்று நிலையாகி சூரிய சந்திர அக்னியாகி முச்சுடராகி விளங்குகிறது. ஐந்து பூதங்களும் இணைந்து ஒரு சேர நின்ற கண்களில் துலங்குகிறது. மூன்றும் ஐந்தும் எட்டு ‘அ’ என்றும் கண்ணாக நிற்கிறது. ஆதிக்கண் என்றது நாம்.  நம் தாயின் கருவில் உருவாகும்போது இறைவனால் அருளப்பட்ட ஜீவனைக் குறிப்பதாகும். இரு கண் மூலமாகவே ஆதிகன்னான ஜீவனை அடைய முடியும். பாவாத்மாக்கள் இந்த உண்மையை சொன்னாலும் புரிந்து கொள்ளார். இறைவன் நம் உடலில் இங்ஙனம் குடி கொண்டிருக்க இது புரியாமல் சிவன் விஷ்ணு பிரம்மா என பலவாறு தெய்வங்களை கூறி பிதற்றுவார்கள். உடலினுள்ளே பார்க்காமல் உலகிலே தேடுவார்கள்.
நமது கண் ஒளியை பெருக்கி உள்ளே கொண்டு போனால் உள் உள்ள ஆன்ம ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகள் அகன்று விடும். இதுவே ஞான தவம். இப்படி செய்துதான் நாம் தூய்மையாகிதன் இறைவனை அடைய முடியும்.
நம் சிரசிலிருந்து ஒரு நாடி கீழே இறங்கி நமது தொண்டையில் உள்ள சிறிய நாக்கின் மேல் பகுதியில் அண்ணாக்கின் மேல் நின்று அங்கிருந்து இரு நரம்பாக பிறந்து இரு கண்களிலும் வந்து சேர்க்கிறது. நாம் நம் கண்மணி ஒளிமூலம் தவம் செய்யும் போது இருகண்ணும் உள்ளே ஒன்றுசேரும் இடமே உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேல. இதுவே நமது ஆத்மஸ்தானம். உயிர் இருக்குமிடம்.
“உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே”


நமது உயிர் – பிராணன் – ஜீவன் – ஆத்மா இருக்கும் இடம் இதுவே. இதற்க்கு வாசல் இரு கண்களே ஆகும் இதை அறிந்தால் தானே தவம் செய்ய முடியும். குருவடி தீட்ஷை பெற்று உணர்ந்து தவம் செய்து ஆத்மஜோதியை   தரிசிக்கலாம்.

Reader Comments (4)

  1. gayathri gajendran August 16, 2013 at 3:59 pm

    hi,
    i from villupuram. i have 2 children. can i do meditation?

  2. sai September 13, 2018 at 4:19 am

    Hi

    I m from Malaysia. How do i can get the Deeksai

What do you think?