திருஅருட்பா முதல் திருமுறை

34 அடியார் பணி அருள வேண்டல்

 
 எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என்
அப்பாஉன்  பொன்னடிக் கென் நெஞ் சகம்இட மாக்கிமிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்து 
இப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே


எவ்வுலகில் உள்ள எவரும் வணங்கும் தனிகையான கண்மணி
ஒளியான என் அப்பா! உன் பொன்னடிக்கு என் நெஞ்சத்தில் இடங்கொடுத்து
அருள்புரிவாயாக! தீயவர்கள் பக்கம் நான் போகாமல் தடுத்து காத்து என்
வினையகற்றி உன் மெய்யடியார்க்கு தொண்டு செய்ய அருள் புரிவாயாக!

எய்யா தருள் தணிகாசலம் மேவிய என்னருமை ஐயா – பாடல் 2

நாம் தவம் – கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய
நம் உள்ளிருந்து நம் வினைகள் ஒவ்வொன்றாக நீங்கள் செய்து நம்மை
மேன்மையடைய செய்வான் நம் கண்மணி ஒளியானவான் ! அவன்
அருள் புரிவது கூட நாம் அறியமாட்டோம்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

What do you think?