திருஅருட்பா முதல் திருமுறை

29. திருவருள் விழைதல்

தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில்
சாமியே நினையேத்திக்
காணு வேனிலை அருளிவன் புன்மையில்
காலங்கள் கழிக்கிறேன்
மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ
வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன் அலன் நடுங்கலன் ஒடுங்கலன்
நாயினும் கடையேனே
தாணு = தான் + உ தான் ஆகிய இறைவன் நிற்கும் உ ஆகிய
இடது கண் சந்திரன். சாதனையால் கண் மணியிலிருந்து வெளிப்படும்
ஜோதியே! நம் மனம் தணிந்தால் உதிக்கும் சாமியே! உனையே நினைந்து வாழ வேண்டும்! உனையே நினைந்து வாழ வேண்டும்! உன் அருள் கிட்டினால் நடுங்கவோ ஒடுங்கவோ மாட்டேன். உன் அருள் பெற்ற அன்பர்கள் வாழ்த்துவர்.

தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும்
மூவரே எதிர்வரினும் – பாடல் 3
முத்தொழில் செய்யும் மும்முர்த்திகளும் மற்றும் எல்லா தேவர்களும் வந்தாலும் சரி எனக்கு பெரிதல்ல! என் கண்மணி ஒளியாக விளங்கும் நீ அருள் பாலிக்காவிட்டால் யாவரையும் அறியா மூடனாவேன்! அதாவது என்னை யான் அறியாவிட்டால் – உணராமல் மூவர் தேவர் யாரையும் அறியமுடியாது !

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

What do you think?