திருஅருட்பா முதல் திருமுறை

முறையிட்ட பத்து

பொன்னைப் பொருளா நினைப்போர்பால்
போந்து மிடியால் இரந்தலுத் தேன்
நின்னைப் பொருளென் றுணராத
நீசன் இனியோர் நிலைகாணேன்
மின்னைப் பொருவும் சடைபவள
வெற்பில் விளைந்த வியன்கரும்பே
முன்னைப் பொருளே தணிகையனே
முறையோ முறையோ முறையேயோ

இறைவா நீதான் மெய்ப்பொருள் என்று உணராமல் பொன்னை
பொருளாக எண்ணி அதை பெறுவதற்காக பலரிடமும் சென்று
முயன்று மனம் வெறுத்தேன்!  மின்னலைப்போன்ற சடையுடைய
செம்மையான சிவ ஒளியில் தோன்றிய இனிய ஒளியே! முதல் பொருளே
என்கண்மணியே காத்தருள்!

முக்கட் கரும்பின் முழு முத்தே – பாடல் 2

நமது வலது கண் இடது கண்  இரண்டும் உள்ளே சேரும் மூன்றாவது கண்
மூன்றும் சேர்ந்தால் தோன்றும் முத்தே – வெள்ளொளியே !

முன்பின் நடுவாய் முளைத்தோனே – பாடல் 3

நாம் தவம் செய்யும் போது கண்மணி ஒளியை தியானம் செய்யும் போது
முதலில் நமக்கு முன் தோன்றும் ஒளி. தவம் தொடரும் போது நம் சிரசின்
பின் தோன்றும்  ஒளிவட்டம். மேலும் தவம் தொடர தொடர சூரிய சந்திர அக்னி கலை சேர்ந்து மேலும்பும் சிர நடு மேல் எழும்பும் நடுவான ஜோதி! அனுபவம் கூறும் உண்மை!

மோனத்தவர்தம் அகவிளக்கே  – பாடல் 7

இறைவனை அடைய ஒரே வழி மோன நிலையே. ‘மோனமென்பது ஞான வரம்பு ‘ என ஒளவையார் கூறியுள்ளதை காண்க .நம் கண்மணியில் உள்ளே அகத்தில் ஒளிரும் விளக்கை நினைந்து உணர்ந்து சும்மா இருந்தால் மோனமாக – மெளனமாக இருந்தால் கிட்டும் ஞானம். தொடர்ந்தால் கிட்டும் முக்தி.

மூவேதனையை அறுத்தருள் வோய் – பாடல் 8

நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம்  செய்வோமானால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நம் உள் ஒளியால் அறுந்து போகும். நம் கண்மணி மத்தியிலுள்ள துவாரத்தை மறைத்து கொண்டிருக்கும் திரையே மும்மலங்கள்.உள் ஒளியை நாம் பெருக்க பெருக்க திரை உஷ்ணத்தால் அறுந்து போகும். ஞானம் கிட்டும்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

What do you think?