நிகழ்வுகள்

இறைவன் திருவடி பற்றி தேவாரத்தில்

பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் முதல் மூன்று திருமுறை திருஞான சம்பந்தர் அவர்களால் அருளப்பட்டது. நாலாம் ஐந்தாம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் பெருமானால் அருளப்பட்டது. எழாம் திருமுறை சுந்தரர் பெருமானால் அருளப்பட்டது. இம்மூவரும் முக்கண்ணனான சிவனை இறைவனை அடைந்தவர்களே.

மூவர் பாடிய தேவாரம் எவ்வளவு உன்னதமானது என்றும் மூவரும் எவ்வளவு உயர்ந்த ஞானிகள் என்றும் திருவருட்ப்ரகாச வள்ளலார் பாடிய திருவருட்பாவால் அறியலாம்.

அப்பர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர் – தசமார்க்க நெறி நின்று தள்ளாத வயதிலும் தளராத மனம் கொண்டு கைலாயத்தை நாடி சிவத்தை அடைந்தார்.ஆண்டான் – அடிமை என்ற நெறிக்கு எடுத்துக்காட்டு அப்பர்.
சம்பந்தர் – சத்புத்திர மார்க்க நெறி நின்று 3 வயதிலேயே ஞானப்பால் அருந்தி 16 வயதிலே கூண்டோடு கைலாசம் போனார்.தகப்பன் – பிள்ளை என்ற நெறிக்கு எடுத்துக்காட்டு சம்பந்தர்.
சுந்தரர் – சகமார்க்க நெறி நின்று இறைவனையே தோழராக கொண்டு உடலோடு கைலாயம் போன உன்னதமானவர் சுந்தரர். தோழர் இறைவன் என்ற நெறிக்கே எடுத்துக்காட்டு சுந்தரர்.

திருஞான சம்பந்தரை போற்றி “ஆளுடைய பிள்ளையார் அருண் மாலை” என்ற தலைப்பில் பாடல் இயற்றி உள்ளார் வள்ளல் பெருமான்.
திருநாவுக்கரசரை போற்றி “ஆளுடைய அரசு அருண் மாலை” என்ற தலைப்பில் பாடல் இயற்றி உள்ளார் வள்ளல் பெருமான்.
சுந்தரரை போற்றி “ஆளுடைய நம்பிகள் அருண் மாலை” என்ற தலைப்பில் பாடல் இயற்றி உள்ளார் வள்ளல் பெருமான்.

“ப்பாவம் : வெவ்வேறாயினும் பண்பு ஒன்றே. சிவத்தை அடைந்த பேரருளாளர் இம்மூவருமே. தனக்குள் இருக்கும் மூன்றாவது கண்ணை உணர்ந்தனர் முக்கண்ணன் அருளாலே.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, மூவர்களால் நமக்கு அருளப்பட்ட தேவாரத்தில் சுட்டி காட்டப்பட்டு – போற்றப்பட்டுள்ள இறைவன் திருவடி மெய்ப்பொருள் பற்றிய பாடல்களை கீழ் கண்ட பதிவுகளில் காண்போம் .எங்கள் குரு நாதரின் தேவார விளக்க உரை நூல் “மூவர் உணர்ந்த முக்கண்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது:

திருவடி பற்றி திருஞானசம்பந்தர் பெருமான்

திருவடி பற்றி திருநாவுக்கரசர் பெருமான்

திருவடி பற்றி சுந்தரர் பெருமான்

What do you think?