ஞான பதிவுகள்

சித்தர்கள் போற்றும் வாலை

வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமு மாமே

– திருமந்திரம்

னதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம் செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்! “மன்மணம் எங்குண்டு வாயு அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும்  2 கோடியாகும்! அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் தாயின் கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்! மிகப்பெரிய இரகசியம் இது! சித்தர் சொன்ன இரகசியம்! ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த அரணுக்கு இவளே எல்லாமாம்!

ஆதி சக்தியாக படைத்ததால் தாய்! சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி! உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால் மகளுமாவாள்! ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை இது!  ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள் உள்ளன! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது! “நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்” முருகப் பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்! வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள் தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து செல்வர்! தாயே வாலையே என மகாமாயையைபணிந்தால் அரவணைப்பாள்! மும்மலத்தில் பெரியது மாயை! எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்! தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்! உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக பார்த்தால் மட்டுமே தப்பலாம்! அபிராமி பட்டரைப் போல! அழுதால் அமுதம் தருவாள்! ஞானசம்பந்தருக்கு தந்தது போல! பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததை போல! இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அன்னையின் மகிமையை!! அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்! இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல! எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்! வாலைதான்! கன்னியகுமரி பகவதி அன்னைதான்! சரணம்! சரணம்! சரணம்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் மந்திர மணி மாலை என்னும் நூலில் திருமந்திர பாடலுக்கான விளக்கம்

Reader Comments (4)

 1. V Ganesh January 26, 2014 at 4:21 am

  ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்! “ can you please explain how it is done

  • admin January 29, 2014 at 6:39 am

   Please see “THavam Seivathu Eppadi” Article and Tiruvadi Deekshai article.

 2. saravana Kumar July 4, 2017 at 2:23 am

  aiyaa intha annaiyin aalayam yengullathu

  nandri…

What do you think?