ஞான பதிவுகள்

யார் சந்நியாசி?

காவியிலே வசிக்க வேண்டும் என்று வள்ளல் பெருமான் சொல்கிறார். அந்த திருவருட்பா பாடலும் அதற்க்கான விளக்கம் ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் திருவருட்பா பாமாலை என்ற புத்தகத்தில் இருந்து

காவி மலைக்கண் வதியேனோ

கண்ணுள் மணியைத் துதியேனோ

திருவருட்பா (ஆற்றா விகாரம்)

காவிமலைக்கண் – நாம் தியானம் செய்யும் போது நம் கண் சிவந்து காவிக் கண்ணாகி விடும். சந்நியாசி காவி கட்ட வேண்டும் என்பர்!

காவித்துணியை உடலில் சுற்றிக் கொள்பவன் சந்நியாசி இல்லை! கண் வெள்ளை விழி சிவப்பாகி காவியாகி எப்போதும் இருப்பவனே – அதாவது சதாகாலமும் தவத்தில் ஆழ்ந்திருப்பவனே உண்மையான சந்நியாசி.

நாம் அந்தகாவி மலைக்கண்ணிலே வசிக்க வேண்டும் என்கிறார் வள்ளல் பெருமான். கண்ணுள் மணியை நினைந்து உணர்ந்து துதித்தாலே தவம் செய்தாலே காவி மலைக் கண் பெற வழியாகும்.

அதற்கு விழித்திருந்து தவம் செய்ய வேண்டும்!

குருவை பணி! கண்ணை திற! சும்மா இரு!

What do you think?