ஞான பதிவுகள்

திருமந்திரம்

சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம்


தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற பெரும் பேறு சாத்திரத்தில் சிறந்த “திருமந்திரம்” இங்கே இருப்பது தான்! காலத்தால் முற்பட்ட மாபெரும் கருத்து கருவூலம்தான் “திருமந்திரம்”

திருமந்திரம் எல்லாவற்றையும் கூறும் ஞான நூல்! உலக மக்கள் அனைவருக்கும் உரிய, உயரிய தமிழ் வேதம்! எல்லாருக்கும் பொதுவான நூல்!

குறிபிட்ட பிரிவினருக்கு உரியது அல்ல! மனிதகுலம் மேம்பட வழிகாட்டும் மகத்தான வழிகாட்டி திருமந்திரம்!

திருமூலர் கைலாயத்திலிருந்து வரும்போது மூலன் என்னும் மாடு மேய்ப்பவன் இறந்து கிடந்ததை கண்ணுற்றார். மூலன் இறந்ததால் அவன் வளர்த்த பசுக்கள் வருந்திகொண்டிருந்தன. வருந்தும் பசுக்களின் துயர்கண்டு இரங்கி, கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலன் உடலினுள் புகுந்து, பசுகூட்டத்தின் துன்பம் போக்கி, அவைகளை அதனதன் இடம் விட்டு திரும்புகையில், தன் உடல் காணாது திகைத்தார்.

இறைவன் தன்னை மூலன் உடலிலேயே தங்கியிருக்க அருளியதை உணர்ந்தார். பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலனாக இல்லாமல் ஜீவர்களாகிய பசுக்கள் போக வேண்டிய புரிய வேண்டிய அடைய வேண்டிய விஷயங்களை தெளிவுபடுத்த திருமந்திரம் பாடியருளினார். யோக நிஷ்டையிலிருந்து எழுந்து வருடம் ஒரு பாடல் என 3000 வருடங்களில் 3000 பாடல்கள் பாடியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நமக்கு பல செய்திகள் கிடைக்கின்றன.

3000 வருடம் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்றும், தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே சிறப்புற்று விளங்கியது என்றும் அறிய பெரும் வியப்பாக உள்ளது! மூலன் உடலில் புகுந்ததால் திருமூலராகி திருமந்திரம் 3000 பாடல்களை நாம் உய்யும் வண்ணம் நமக்கு தந்தருளினார்கள்.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருமந்திரத்தின் பெருமையை மிகவும் வியந்து போற்றுவார். வியந்து போற்றினார் என்றால் என்ன அர்த்தம் வள்ளல் பெருமான் எந்த சன்மார்கத்தை சொன்னாரோ அதே சன்மார்கத்தை தான் திருமூலரும் சொன்னார். என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே என் திருமூலரே தன் வருகை பற்றியும் தமிழ் பெருமையயும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

இங்குள்ள ஞான நூற்கள் ஏராளம். அவற்றுள் தலையாதது! ஏன் உலகத்திலேயே தலை சிறந்தது என்று கூட கூறலாம்! சாஸ்திரங்களிலெல்லாம் உயர்ந்தது! மேன்மையானது திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகும். “சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம்”.

திருமந்திரத்தில் 3000 பாடல்கள் இருந்தாலும் அதிலிருந்து சில பாடல்களுக்கு எங்கள் குரு நாதரின் விளக்கங்களை அவ்ருடைய “மந்திர மணி மாலை” என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து வைக்கிறோம். அடுத்தடுத்த பதிவுகளில்.

——————————————————

திருமூலர் திருவடிClick Here

சித்தர்கள் திருவடி – Click Here

——————————————————-

What do you think?